தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும்

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடை பெறவுள்ளதென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. வாக்களிக்க தகுதி பெற்றோர் நேர காலத்துடன் தமது அலுவலகங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மூன்று மாகாண சபைகளுக்குமுரிய ஏழு மாவட்டங்களிலும் தபால் மூலம் வாக்களிப்பதற்கென ஒரு இலட்சத்து 789 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இம்முறை தபால் மூல வாக்களிப்பில் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவென பல்வேறு இரகசிய பாதுகாப்பு யுக்திகள் கையாளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

இதேவேளை, இன்றும் நாளையும் தமது தபால் மூல வாக்குகளை செலுத்த தவறுவோர் எதிர்வரும் 08 ஆம் திகதி வரையில் தமக்குரிய மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி முன்னிலையில் வாக்களிக்க முடியுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

– தினகரன்

 

 

 

Published by

Leave a comment