அவுஸ்திரேலியாவில் தற்பொழுது இடம்பெற்றுவரும் பத்தொன்பது வயதிற்குட்பட்ட வீர்கள் பங்குபற்றும் ஆண்களுக்கான சர்வதேச 50 ஓவர்கள் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் (U19 ICC Cricket World Cup – 2012) இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேயாவும் இந்தியாவும் தெரிவாகி இருக்கின்றன.
இவ் இறுதிப்போட்டி ‘டோனி அயர்லாந்து’ விளையாட்டு மைதானத்தில் ஞாயிறு (26-08-2012) உள்நாட்டு நேரப்படி காலை 09:30 இற்கு நடைபெற இருக்கின்றது.
1988ம் ஆண்டிலிருந்து இடம்பெற்று வரும் இவ் உலகக்கிண்ணத் தொடரில் இரு அணிகளதும் பலப்பரீட்சையில் வெற்றிபெரும் அணி, உலகக் கிண்ணத்தை இன்று முடிசூடும்.
1988ம் ஆண்டில் முதலாவது உலகக்கிண்ணப் போட்டி இடம்பெற்றாலும் இரண்டாவது உலகக் கிண்ணப் போட்டிகள் பத்து வருடங்களின் பின், 1998ல் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கவை. இதன்பின்னர் இரு வருடங்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இதுவரை இடம்பெற்ற 8 உலகக் கிண்ண போட்டிகளில் அவுஸ்திரேலியா (1988, 2002, 2010) 3 முறைகளும், இந்தியா (2000, 2008) 2 தடவைகளும், பாகிஸ்தான் (2004, 2006) 2 தடவைகளும் அதிகப்படியாக சம்பியனாகி இருக்கின்றன. இங்கிலாந்து ஓரே ஒரு தடவை 1998ல் சம்பியன் பட்டத்தை வென்றிருக்கின்றது. இலங்கை இதுவரை பத்தொன்பது வயதுக்கிடைப்பட்ட கிரிக்கட் சம்பியனைப் பெறவில்லை
பத்தொன்பது வயதிற்கிடைப்பட்ட பத்தாவது அடுத்த உலகக் கிண்ணப் போட்டிகள் 2014 ஜூலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
![149021[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/1490211.jpg?w=287&h=300)
Leave a comment