நீல் ஆம்ஸ்ட்ரோங் மரணம்!

-MJ

நீல் ஆம்ஸ்ட்ரோங் (Neil Armstrong) யைப் பற்றி தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். 1930ம் ஆண்டு ஒஹியோ, அமெரிக்காவில் பிறந்தவர். 1950ல் கொரியாவுக்கு எதிரான  யுத்தத்தில் ஓர் கடற்படை வீரராக இணைந்தார். 1962ல் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுப் பிரிவில் இணைந்தார். 20, ஜூலை 1969ல் உலகின் பார்வையை தன்பக்கம் ஈர்த்து, உலக வரலாற்றில் சந்திரனில் முதலில் கால் பதித்து சாதனை படைத்தார்.

சந்திரனில் ஒக்சிஜன் இல்லை எனவும், சந்திரனில் நிழல் விழாது எனவும் அப்போது அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையம் நிருபித்திருந்தது. எனினும் நீல் ஆம்ஸ்ட்ரோங் அமெரிக்க கொடியை சந்திரனில் நடப்படும் போது அது பறப்தாக காண்பிக்கப்பட்டதையும், கொடி பறப்பதால் சந்திரனில் வளி இருக்கின்றது என்பதையும், அங்கு நீல்ஆம்ஸ்ட்ரோங் இன் நிழல் கொடிக்கு அருகில் காணப்பட்டதையும் அப்போது அமெரிக்காவுக்கு அனைத்து விடயங்களிலும் எதிராளியாக இருந்த சோவியத் யூனியன் சுட்டிக்காட்டி, நீல் ஆம்ஸ்ட்ரோங்கின் சந்திரனின் கால்பதிப்பை மறுத்திருந்ததும் விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்பொழுது மேலதிக நவீன ஆய்வுகள் சந்திரனிலும் ஏனைய கிரகங்களிலும் வல்லரசு நாடுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தனது விண் பயணத்தில் ஓர் ஒலியைக் கேட்டதாகவும், பிரகாசமான இரு வெளிச்சங்களை தான் சந்திரனில் இருக்கும் போது கண்டதாகவும் மேலும்  அவ் ஒலி ‘அதான்’ எனவும் இரு வெளிச்சங்கள் மக்காவும், மதீனாவும் எனவும் ஆம்ஸ்ட்ரோங் கூறியதாக  உத்தியோக பூர்வமற்ற செய்திகள் அப்போது வெளியாகி இருந்தன.

இவர் இஸ்லாத்தை ஏற்றாரா என்பது படைத்தவனுக்கு மாத்திரமே தெரிந்த விடயம். எனினும் 1969 ற்குப் பின்னர் ஆம்ஸ்ட்ரோங் அமெரிக்காவில் இருந்தாரா என்பதில் பல சந்தேகங்களைத் தோற்றுவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தனது 82வது வயதில் அவரது உலக வாழ்க்கையின் இறுதிப் பயணத்தில் இன்று நீல் ஆம்ஸ்ட்ரோங் சங்கமித்திருக்கின்றார். தற்பொழுது பல்லாயிரக்கணக்கான மக்கள் சோகங்களை வெளிப்படுத்தி அஞ்சலி செலுத்திவருகின்றனர்..

Published by

Leave a comment