Month: May 2013
-
குற்றத்தை ஒப்புக்கொண்டதாலேயே ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் அஸாத் சாலி விடுதலை!
கொழும்பு: அரசாங்கத்திற்கு எதிராக கருத்துத் தெரிவித்தமை, இனவாதத்தை தூண்டியமை, இனங்களிடையே குழப்பம் ஏற்படுத்தல் அடங்கலாக பல குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த கொழும்பு மாநகரசபை முன்னாள் பிரதி மேயர் அசாத்சாலி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உத்தரவின்பேரில் நேற்று விடுவிக்கப்பட்டார்.
-
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபிய உயர் அதிகாரிகள் குழு விசேட விமானம் மூலம் மட்டக்களப்பு விஜயம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சர்வதேச இஸ்லாமிய கலாசார அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவரும் நிதாஉல் ஹைர் அமைப்பின் பணிப்பாளருமான சைய்ஹ் ஹாலித் தாவுத் தலைமையிலான அரேபிய குழுவினர் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விசேட விமானம் மூலம் வருகை தந்தனர்.
-
உலக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் அனுசரனையுடன் உலமாக்களுக்கான கல்வி கருத்தரங்கு இன்று காத்தான்குடியில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உலக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் அனுசரனையுடன் அபிவிருத்திற்கும் மனிதாபிமானத்திற்குமான சர்வதேச அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உலமாக்களுக்கான கல்விக் கருத்தரங்கு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் காரியலாய மேல்மாடியில் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம். அலியார் (பலாஹி) தலைமையில் இடம்பெற்றது.
-
‘ஒபாமா பிணத்துடன் மட்டும் வேண்டும்’: பத்திரிகை விளம்பரத்தால் அமெரிக்கா அதிர்ச்சி!
வாஷிங்டன்: புதிதாக தோன்றியுள்ள ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையில், ‘பல ஆயிரம் உயிர்களைக் கொன்ற ஒபாமா வேண்டும்- பிணமாக மட்டும்’ என்று முழுப்பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா அதிர்ச்சியில் உள்ளது.
-
சட்டத்தின் ஆட்சிக்கு அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் சேவை இன்றியமையாதது- நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: சட்டத்தின் ஆட்சிக்கு அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் சேவை இன்றியமையாதது என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
-
புதிய ஆய்வக வளாகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு
– றிஸ்கான் முகம்மட் கொழும்பு: அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் புதிய அலுவலகம் மற்றும் ஆய்வக வளாகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்துவைத்தார்.
-
மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரனுக்கும் முஸ்லிம் பொது மக்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பு காத்தான்குடி ஜாமிஉல்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயலில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரனுக்கும் முஸ்லிம் பொது மக்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஜாமிஉல்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயலில் ஜூம்மா தொழுகையின் பின் இடம்பெற்றது.
-
அசாத் சாலி விடுதலை!
கொழும்பு: பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கடந்தவாரம் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் துணை மேயரான அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் தலையீட்டை அடுத்தே அவர் விடுதலை செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
-
இப்படியும் ஒரு இளம் சமூகமா?
– முகம்மது இப்றாஹீம் கடந்த 05/04/2013 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி-தீனுடைய பணிக்காக சென்ற நாங்கள் ஊர் திரும்புவதற்காக வேண்டி பஸ்ஸை எதிர்பார்த்த வண்ணம் ஏறாவூர் மெயின் வீதியில் நின்றோம். அத்தருணம் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு செல்லக் கூடிய ஏறாவூர் பஸ் டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்று எமக்கு முன்னால் வந்து நின்றது.
-
நபி (ஸல்) அவர்களின் அழுகை
ஆண்கள், பெண்கள் என அனைவருமே அழுகிறார்கள். அவ்வழுகைகள் யாருக்காக, எதற்காக என்பதை நாம் யாரும் பெரிதாக கவனத்தில் எடுப்பதில்லை. நபி (ஸல்) அவர்கள் விரும்பினால் உலகமே அவர்களின் கையில், சுவர்க்கத்தின் உயர்ந்த இடத்தில் அவர்கள் இருக்கும் நிலையில் சுவர்க்கம் அவர்களுக்கு முன் அவ்வாறான நிலையிலும் நபிகளார் அழுதார்கள்.
-
உலக பொருளாதாரம்
– அப்துல் மஜீத் மனிதர்களின் பெரும்பாலான நேரத்தைப் பொருளாதாரச் சிந்தனைகளும், செயல்களும் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன. பொருளை சம்பாதிப்பது, செலவிடுவது, சேமிப்பது, வாரிசுகளுக்கு விட்டுச் செல்வது போன்ற சிந்தனைகளில் மனிதன் மூழ்கிக் கிடப்பதை காண முடிகின்றது.
-
மட்டக்களப்பு மாவட்ட (OVER 40) உதைபந்தாட்ட அணி வெற்றி
– நமது நிருபர் மட்டக்களப்பு: இலங்கை கால்பந்தாட்டச் சங்கம் (FFSL) நடாத்தும் அணிக்கு 11 பேர் கொண்ட நாற்பது வயதுக்கு மேற்பட்டோருக்கான கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணி கால் இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.