Month: May 2013
-
சமாதான நீதவான் நியமனம்
டீன் பைரூஸ். காத்தான்குடி: புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலின் தற்போதைய தலைவர் அல்.ஹாஜ். கே.எல்.எம். றஹீம், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபிழ் என்.எம். அப்துல்லாஹ் அவா்களின் முன்னிலையில் தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
-
சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் தொடர்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்- உலக வங்கிப் பிரதிநிதிகள் சந்திப்பு
– எப்.எம்.பர்ஹான் கொழும்பு: நீதி அமைச்சினால் இலங்கையில் நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் தொடர்பில் ஒரு வர்த்தக திட்டத்தை வகுப்பதற்கு உலக வங்கியால் ஆலோசகராக கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள கிரஹம் மெர்ஸி, அதன் செயலாக்க சாத்தியக்கூறுகள் பற்றி அமைச்சர் ஹக்கீமிடம் விளக்கிக் கூறினார்.
-
புத்திசுவாதீனமுற்ற மகன் தாக்கியதில் தாய் பலி-காத்தான்குடியில் சம்பவம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி 3ஆம் குறிச்சி ஊர்வீதி மில்லத் மகளிர் வித்தியாலய வீதியில் புத்தி சுவாதீனமுற்ற மகன் ஒருவர் தாயை அடித்துத்; தாக்கியதில் தாய் பலியான சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
-
சில பிரதேச சபைகளின் தலைவர்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதற்கு தடைகளை ஏற்படுத்திவருகின்றனர்: சுசன்த புன்சி நிலமே
– வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா: வவுனியா மாவட்டத்தில் வாழும் அனைத்து சமூகத்திற்கு சமமான அபிவிருத்தி பணிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், சில பிரதேச சபைகளின் தலைவர்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதற்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டியுள்ள பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசன்த புன்சி நிலமே வன்னி மாவட்ட மக்களுக்கு தேவையானவற்றை அமைச்சர் றிசாத் பதியுதீன் பெற்றுக் கொடுத்துவருவது எம்மால் பாராட்டப்பட வேண்டியது என்றும் கூறினார்.
-
இந்திய சிறையில் தாக்கப்பட்ட பாகிஸ்தான் ஆயுள்கைதி சனாவுல்லா மரணம்!
-OIT: சண்டிகர்: ஜம்மு சிறையில் சக கைதியால் கடுமையாக தாக்கப்பட்ட பாகிஸ்தான் ஆயுள் தண்டனைக் கைதி சனாவுல்லா ரஞ்சய் கோமாநிலையிலிருந்து மீளாமலேயே இன்று காலை மரணமடைந்தார்.
-
தமிழ், முஸ்லிம் இரு தரப்பினரும் எதிர்நோக்கும் காணி விவகாரம் உள்ளிட்ட சகல பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்- நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: முல்லைத்தீவு பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் படிப்படியாக கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ள நல்லிணக்கம், நல்லுறவு, என்பன பாதிக்கப்பட்டு அதனால் இனமுறுகல் ஏற்படாதவிதத்தில் இரு தரப்பினரும் எதிர்நோக்கும் காணி விவகாரம் உள்ளிட்ட சகல பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியத்தை நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.
-
அரசியல் புறக்கணிப்பில் இடம்பெற்ற காத்தான்குடி தொழிலாளர் தினம்
– விசேட நிருபர் காத்தான்குடி: கடந்த புதன்கிழமை மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம் உலகெங்கிலும் தொழிலாளர்களை கௌரவிக்கும் முகமாக வழமைபோல் கொண்டாடப்பட்டது.
-
இஸ்ரேல் மாநாட்டை பிரிட்டிஷ் விஞ்ஞானி ஹாக்கிங் புறக்கணிப்பு
லண்டன்: உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி, ஸ்டீபன் ஹாக்கிங், இஸ்ரேலிய அதிபர் ஷிமோன் பெரஸ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு ஜுன் மாதம் இஸ்ரேலில் நடத்தப்படவிருக்கும் ஒரு பெரிய மாநாட்டில் கலந்துகொள்வதிலிருந்து விலகிக்கொண்டிருக்கிறார்.
-
யுத்த சூழ்நிலையில் வெளியேற்றப்பட்ட அல்லது இடம்பெயர்ந்த மக்கள் தமது பூர்வீக வதிவிடங்களில் வாக்களிப்பதற்கு வகைசெய்யும் விதத்தில் வாக்காளர் பதிவு நாளை வியாழக்கிழமை
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: யுத்த சூழ்நிலையில் வெளியேற்றப்பட்ட அல்லது இடம்பெயர்ந்த மக்கள் தமது பூர்வீக வதிவிடங்களில் வாக்களிப்பதற்கு வகைசெய்யும் விதத்தில் வாக்காளர் பதிவு விஷேட ஏற்பாடுகள் சட்டத்தை நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வியாழக்கிழமை (9) அங்கீகாரத்திற்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கின்றார்.
-
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டரங்கு வீதி உற்பட அப்பிரதேசம் முழுமையாக அழகுபடுத்தப்படும் -பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் – நேரில் சென்று பார்வை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரை வீதியில் இருந்து ஆரம்பிக்கின்ற ஹிஸ்புல்லாஹ் விளைளையாட்டரங்கு வீதியும் அதனோடு இணைந்த பிரதேசமும் முழுமையாக செப்பனிடப்படுவதோடு அங்கு மர நடுகை வர்ணக்கற்கள் பொருத்துதல் போன்ற செயற்பாடுகள் முலம் நவீன மயப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட இருப்பதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.
-
இனத் தொடர்புச் சபையொன்றை அமைப்பது தொடர்பாக தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதந்துரைக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹக்கீம் – நோர்வே தூதுவர் கிறீடி லோச்சனிடம் தெரிவிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இனங்களுக்கிடையிலான பலதரப்பட்ட விவகாரங்களை சுமூகமாக கையாள்வதற்காக இனத் தொடர்புச் சபையொன்றை அமைப்பது தொடர்பாக தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதந்துரைக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.