‘ஒபாமா பிணத்துடன் மட்டும் வேண்டும்’: பத்திரிகை விளம்பரத்தால் அமெரிக்கா அதிர்ச்சி!

obamaவாஷிங்டன்: புதிதாக தோன்றியுள்ள ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையில், ‘பல ஆயிரம் உயிர்களைக் கொன்ற ஒபாமா வேண்டும்- பிணமாக மட்டும்’ என்று முழுப்பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா அதிர்ச்சியில் உள்ளது.

Azan – A Call to Jihad என்பது அந்தப் பத்திரிக்கையின் பெயராகும். இதன் இணையத்தள பதிப்பில்தான் இந்த விளம்பரம் இடம் பெற்றுள்ளது. அதில், ஒபாமாவின் படத்தைப் போட்டு ‘பிணமாக மட்டும் தேவை’, ‘பராக் ஒபாமா கொலைகாரன் – பரிசு – பின்னர்’  என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பத்திரிக்கை 80 பக்கங்களைக் கொண்ட இந்தப் பத்திரிக்கை, அல் கொய்தாவினரால் மறைமுகமாக தொடங்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்தப் பத்திரிக்கையின் பின்னணியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

-OIT

obama

Published by

Leave a comment