மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரனுக்கும் முஸ்லிம் பொது மக்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பு காத்தான்குடி ஜாமிஉல்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயலில்

 ???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரனுக்கும் முஸ்லிம் பொது மக்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஜாமிஉல்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயலில் ஜூம்மா தொழுகையின் பின் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் (றஹ்மாணி), மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கிங்ஸிலி குணசேகர  ,காத்தான்குடி பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி ரணசிங்க மற்றும் தொழிலதிபர்களான கலீல் ஹாஜி, அஹமட் லெப்பை மீராசாகிபு ,சமூக மதிப்பீட்டுக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெப்பை , காத்தான்குடி ஜாமிஉல்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாகிகள் , ஆட்டோ சங்கப் பிரதிநிதிகள்  உட்பட பொது மக்கள் ஊர் பிரமுகர்கள், உலமாக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு பெரும் குற்றச் செயல்கள், வீதி போக்குவரத்து சட்டங்கள், பொலிஸ் மற்றும் பொது மக்களுக்கிடையிலான நல்லுறவு, பொலிஸ் சட்ட விதிகள், லஞ்சம் வாங்குவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு எதிராக எவ்வாறு நடவடிக்கை எடுப்பது பற்றியும் பொது மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரனினால் விரிவாக தெளிவுபடுத்தப்பட்டது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment