மட்டக்களப்பு மாவட்ட (OVER 40) உதைபந்தாட்ட அணி வெற்றி

df– நமது நிருபர்

மட்டக்களப்பு: இலங்கை கால்பந்தாட்டச்  சங்கம் (FFSL) நடாத்தும் அணிக்கு 11 பேர் கொண்ட   நாற்பது வயதுக்கு மேற்பட்டோருக்கான கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணி கால் இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.

மட்டக்களப்பு  மாவட்டத்தின் நாற்பது வயதுக்கு மேற்பட்டோருக்கான கால்பந்தாட்ட ( OVER 40 ) அணி இரண்டாம் சுற்றில் போட்டியின்றி கொழும்பு அணியுடன் வெற்றி பெற்று, கால் இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட அணி எதிர் வரும் வாரங்களில் இரத்தினபுரி மாவட்ட அணியுடன் கால் கலக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி மட்- மாவட்ட அணியில் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட்ட வீரா்களான KLM சரீப்டீன், AL. டீன் பைரூஸ், SM. பாயிஸ் ஆகியோரும்  பங்கு பற்றுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

df

Published by

Leave a comment