Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஷவ்வால் பிறை பார்த்தல் தொடர்பாக அன்புப் பொது மக்களுக்கு காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு விடுக்கும் அன்பான வேண்டுகோள்

    – CMM. அமானி அன்புடையீர்,     அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ எம்மை எதிர்நோக்கி வரும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைத் தீர்மானிக்கும் முகமாக எமதூரிலும் எமதூரை அண்மித்த கிராமங்களிலும் ஷவ்வால் பிறையைப் பார்த்து அறிவிக்குமாறு காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சகல பொது மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றது.  

  • முடியுமானால் ஹக்கீம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடட்டும்

    கொழும்பு: வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் தனித்து போட்டியிடும் என தீர்மானித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முடிந்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுமாறு தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் சவால் விடுத்துள்ளார்.

  • இன்று 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்!

    கொழும்பு: புத்தளத்திலிருந்து பொத்துவில் ஊடாக கொழும்பு மற்றும் காலி வரையான கடற் பிரதேசங்களில் இன்று (06) கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இப்பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என அந்நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

  • பாகிஸ்தான் தாக்குதல்: 5 இந்திய வீரர்கள் பலி!

    -MJ அகமதாபாத்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின்  தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதால் இரு நாடுகளின் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டிருக்கின்றது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இன்று அதிகாலை 15 பேர் கொண்ட பாகிஸ்தான் ராணுவக் குழு திடீரென இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 5 இந்திய வீரர்கள் பலியாகியுள்ளனர்.

  • ‘ஏஜ் ஸ்டீல்’ விளையாட்டு கழகத்திற்கு ஒரு தொகுதி கடின பந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் சாய்ந்தமருது: சாய்ந்தமருது ‘ஏஜ் ஸ்டீல்’ விளையாட்டு கழகத்திற்கு இன்று (06.08.2013) கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஒரு தொகுதி கடின பந்து விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்தார். விளையாட்டு கழகங்களை ஊக்குவிக்கும் முதல்வரின் திட்டத்திற்கு அமைவாக மேற்படி உபகரணங்கள் விளையாட்டு கழகத்தின் தலைவர் டாக்டர் எம்.கலாம் மற்றும் செயலாளர் எஸ்.றியால் ஆகியோரிடத்தில் கையளிக்கப்பட்டது.

  • அல்-கய்தாவின் எச்சரிக்கையால் தொடர்ந்து தடுமாறும் மேற்குலகு!

    -MJ றியாத்: மத்திய கிழக்கு, மற்றும் ஆபிரிக்க முஸ்லிம் நாடுகளில் அமைந்திருக்கும் மேற்குலகின் தூதுவராலயங்களை தாக்கப்போவதாக வந்த எச்சரிக்கை செய்திகளையடுத்து மேற்படி நாடுகிளில் தொடர்ந்தும் குறித்த வெளிநாட்டு தூதரகங்கள் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன.

  • வெலிவேரிய சம்பவம்: பொது பல சேனா மீது பலிபோடும் தாக்குதல் திட்டதாரிகள்!

    கொழும்பு: அண்மையில் வெலிவேரிய பிரதேசத்தில் சுத்தமான தண்ணீர் கேட்டு போராட்டம் நடத்திய சிங்கள மக்கள் மீது சிறிலங்கா இராணுவம் காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று பேர் பலியானதுடன், பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  • கல்முனை பரீட்சை நிலையங்களில் கையடக்கத் தொலைபேசிகள்

    கல்முனை:  கல்முனை வலயத்திலுள்ள சில பரீட்சை நிலையங்களில் பணியாற்றும் உதவி மேற்பார்வையாளர்,  நிலைய ஊழியர் போன்றோரிடம் கையடக்கத் தொலைபேசிகள் இருந்ததாக பிரதேச இணைப்பாளர் எம். கே. எம்.  மன்சூர் பரீட்சை ஆணையாளர் நாயகத்திற்கு அவசர ‘ பெக்ஸ்’ மூலம் முறைப்பாடு செய்துள்ளார். 

  • ‘விடுதலைப் புலிகளை அல்லாஹ் அழித்தார் என ஹூனைஸ் பாரூக் கூறுவதை ஏற்க முடியாது’

    கொழும்பு: விடுதலைப்புலிகளையும் தமிழர்களையும் அழித்து பொதுபலசேனா போன்ற சிங்கள இனவாத அமைப்புக்களை அல்லாஹ்வா உருவாக்கினார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • கிழக்கில் களைகட்டும் நோன்புப் பெருநாள் வியாபாரம்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: எதிர்வரும் சில தினங்களில் முஸ்லிம்கள் கொண்டாடவுள்ள ஈதுல் பித்ர் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் பெருநாள் வியாபாரங்கள் களை கட்டியுள்ளதாக வர்த்தக நிலைய வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் வியாபாரம் களைகட்டியுள்ள நிலையில் முஸ்லிம் ஆண்கள், பெண்கள் என பலரும் வர்த்தக நிலையங்களுக்குச் சென்று ஆடைகளை கொள்வனவு செய்கின்றனர்.

  • குருநாகல், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் ஸ்ரீ.ல.கா தலைமைகள் சந்திப்பு

    பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் குருநாகல், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (04) நண்பகல் கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில்

  • காத்தான்குடியில் இருபத்தேழாம் இரவு…

    காத்தான்குடி: நேற்றிரவு ரமழான் இருபத்தேழாம் இரவை முன்னிட்டு, காத்தான்குடி பஸார் நேரத்தோடு மூடப்பட்டதுடன் மக்கள் பள்ளிவாயலுக்குச் சென்று நல்லமல்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டதைக் காண முடிந்தது. ஜாமியுழ்ழாபிரீன் பெரிய மீரா ஜூம்ஆ பள்ளிவாயல், முகைதீன் மெத்தை ஜூம்ஆ பள்ளிவாயல், இரும்புத்தைக்கா மற்றும் ஸெயின் மௌலானா தைக்கா ஆகியவற்றின் நேற்றைய இரவின் காட்சியை ஊருக்கு வெளியிலும் மற்றும் கடல் கடந்து வாழும் எமது வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றப்படுகிறது.

←Previous Page
1 … 992 993 994 995 996 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar