அகமதாபாத்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதால் இரு நாடுகளின் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டிருக்கின்றது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இன்று அதிகாலை 15 பேர் கொண்ட பாகிஸ்தான் ராணுவக் குழு திடீரென இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 5 இந்திய வீரர்கள் பலியாகியுள்ளனர்.
இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இத்தாக்குதல் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, சீனா ஊடுருவுகிறது.. பாகிஸ்தான் தாக்குதல் நடத்துகிறது. இந்திய எல்லைகளைப் பாதுகாப்பதில் மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறது. பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தானின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலில் உயிரிழந்த வீரமிக்க ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதன் காரணமாக இந்தியாவில் பாகிஸ்தான் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.


Leave a comment