ஷவ்வால் பிறை பார்த்தல் தொடர்பாக அன்புப் பொது மக்களுக்கு காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு விடுக்கும் அன்பான வேண்டுகோள்

crescent-moon[1] CMM. அமானி

அன்புடையீர்,     அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

எம்மை எதிர்நோக்கி வரும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைத் தீர்மானிக்கும் முகமாக எமதூரிலும் எமதூரை அண்மித்த கிராமங்களிலும் ஷவ்வால் பிறையைப் பார்த்து அறிவிக்குமாறு காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சகல பொது மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றது.  

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும், 2013.08.07 புதன்கிழமை மாலை பிறை பார்க்கும்படி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிவித்துள்ளது. இதனைக்கவனத்திற் கொண்டு, 08ம் திகதி வியாழக்கிழமை சந்தேகத்திற்குரிய நாளாக கணிக்கப்பட்டுள்ளதால், 2013.08.07 புதன்கிழமை மாலை பிறை தென்பட்டால் ஜம்இய்யத்துல் உலமா காரியாலய தொலைபேசி: 065-2247640, 077 9346065,  ஆகிய இலக்கங்களுக்கும் நேரிலும் உரிய ஆதாரத்துடன் அறியத்தருமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தலைவர் – செயலாளர்.

ஜம்இய்யத்துல் உலமா,

காத்தான்குடி.

06-08-2013

 

Published by

Leave a comment