கொழும்பு: புத்தளத்திலிருந்து பொத்துவில் ஊடாக கொழும்பு மற்றும் காலி வரையான கடற் பிரதேசங்களில் இன்று (06) கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இப்பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என அந்நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை மத்திய- சப்ரகமுவ- மேற்கு- வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
Leave a comment