கொழும்பு: வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் தனித்து போட்டியிடும் என தீர்மானித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முடிந்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுமாறு தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் சவால் விடுத்துள்ளார்.
தமது கட்சிக்கு வாக்கு வங்கி இருக்கின்றது என்ற அடிப்படை நம்பிக்கையில் தனித்து போட்டியிடும் ரவூப் ஹக்கீம் தேர்தலின் பின்னர், யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற தீர்மானத்தின் அடிப்படையில் மீண்டும் அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Leave a comment