காத்தான்குடி: எதிர்வரும் சில தினங்களில் முஸ்லிம்கள் கொண்டாடவுள்ள ஈதுல் பித்ர் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் பெருநாள் வியாபாரங்கள் களை கட்டியுள்ளதாக வர்த்தக நிலைய வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் வியாபாரம் களைகட்டியுள்ள நிலையில் முஸ்லிம் ஆண்கள், பெண்கள் என பலரும் வர்த்தக நிலையங்களுக்குச் சென்று ஆடைகளை கொள்வனவு செய்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நிந்தவூர், அக்கரைப்பற்று, சம்மாந்துரை, பொத்துவில் உள்ளிட்ட பகுதிகளில் வியாபார நிலையங்கள் இரவு நேரங்களிலும் திறக்கப்பட்டிருப்பதுடன் பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை உள்ளிட்ட பகுதிகளிலும் பெருநாள் வியாபாரம் களைகட்டியுள்ளது.
கால நிலை கடும் உஷ்ணமாக காணப்பட்டாலும் வியாபாரம் சுமுகமான முறையில் இடம்பெறுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.