றியாத்: மத்திய கிழக்கு, மற்றும் ஆபிரிக்க முஸ்லிம் நாடுகளில் அமைந்திருக்கும் மேற்குலகின் தூதுவராலயங்களை தாக்கப்போவதாக வந்த எச்சரிக்கை செய்திகளையடுத்து மேற்படி நாடுகிளில் தொடர்ந்தும் குறித்த வெளிநாட்டு தூதரகங்கள் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன.
இதன் காரணமாக தினமும் பல சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகவும் மேற்குல நாடுகள் கவலை தெரிவித்திருக்கின்றன.
இதற்கிடையில் ஆசிய முஸ்லிம் நாடுகளிலும் உந்நாட்டு, வெளிநாட்டு படையினர் பலத்த பாதுகாப்புக்களை வெளிநாட்டு தூதரகங்களுக்கு மேற்கொண்டு வருவது கவனிக்கத்தக்கது.
சென்ற ஞாயிற்றுக்கிழமை அல்-கய்தாவினால் விடுவிக்கப்பட்ட இவ்விசேட எச்சரிக்கையையடுத்து இதுவரைக்கும் 21 மேற்குலக தூதரகங்கள் இந்நாடுகளில் தொடர்ந்தும் மூடப்பட்டு இருக்கின்றன.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட நாடுகளுக்கு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு தங்களது நாட்டு பொதுமக்களுக்கு குறித்த அரசாங்கங்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
இதற்கிடையில் தற்போதைய அல்-கய்தாவின் தலைவரான ஐமன் அல் ஜவாஹிரியுடன் ராஜதந்திர பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கு திரைமறைவில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிநாட்டு துதரகங்களை இலக்குவைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்கு மேற்குலகின் முக்கிய அதிகாரிகள் அரபு நாட்டின் பிரதிநிதிகள் ஊடாக முயற்சித்து வருவதாகவும் தெரியவருகிறது.
![201173165342903150_20[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/201173165342903150_201.jpg?w=680&h=450)
![201173165342903150_20[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/201173165342903150_201.jpg?w=150&h=99)
Leave a comment