WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சவுதி பத்திரிகையாளர் காணாமல் போனதற்கும் அப்பிள் கடிகாரத்திற்கும் இடையிலான தொடர்பு

    இஸ்தன்புல்: சவுதி பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போன பிரச்சனையில், ஒரு அப்பிள் கடிகாரம்  முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. இது அமெரிக்கா, சவுதி இடையே போரை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. சவுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போய் இதோடு இரண்டு வாரம் ஆகிவிட்டது. சவுதியை சேர்ந்த ஜமால் கசோக்கி உலகின் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்களின் ஒருவர்.

  • “அச்சுறுத்தல்களால் எங்களை பணிய வைக்க முடியாது” – சவுதி

    றியாத்: சவுதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கி, இஸ்தான்புலில் உள்ள தமது நாட்டு தூதரகத்திற்கு விவாகரத்து ஆவணமொன்றை வாங்குவதற்காக சென்றார். அதன் பின் அவரை காணவில்லை. துருக்கி அதிகாரிகள் ஜமால் தூதரகத்திலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள். ஆனால், அவர் தூதரகத்திலிருந்து கிளம்பிவிட்டார் என்கிறது சவுதி. ஒரு காலத்தில் சவுதி அரச குடும்பத்தின் ஆலோசகராக இருந்தவர், பின் சவுதி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார்.

  • ஐபோனின் பின்புறத்தில் சிறு துளை எதற்கு..?

    ஐபோன் வாங்கியதில் இருந்து சரளமாக பயன்படுத்தி இன்று அந்தக் கருவி குறித்து எதையும் செய்ய தெரிந்திருந்தாலும் அந்தக் கருவியில் இருக்கும் சில விடயங்கள் எல்லோருக்கும் தெரிந்திருப்பதில்லை. ஐபோன் 5 மொடலில் துவங்கி ஒவ்வொரு ஐபோன் கருவியிலும் கமரா லென்ஸ் மற்றும் பிளாஷ் நடுவே சிறிய துளை வழங்கப்படுகின்றது. ஆனால் அந்த இடத்தில் அத்தகைய சிறிய துளை எதற்கு.? என்பது பற்றி பலருக்குத் தெரியாது.

  • 5000 ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம்!!

    கொழும்பு: இலங்கையில்  5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகி, 50,000 ரூபாயாக இது அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் அதிக மதிப்புடைய பணநோட்டு 5000 ரூபாயாகும். இந்த 50,000 ரூபாய் போலி பணநோட்டுக்களை குருணாகல் பிரதேசத்தில் போலீசார் அண்மையில் கைப்பற்றியிருந்தனர். இதுகுறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • திருகோணமலை மாவட்ட காணி பிரச்சினை தொடர்பாக பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்

    எம்.ரீ. ஹைதர் அலி திருகோணமலை: திருகோணமலைமாவட்டத்தின், புல்மோட்டை, குச்சவெளி, தோப்பூர், நீனாக்கேணி பிரதேசங்களிலுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீர் வழங்கல், நகரத் திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில்  11.10.2018 பி.ப.2.30 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

  • அவசரமாக கொடுக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட ‘ரெட் அலெர்ட்’

    சென்னை: தமிழகத்தில் மழை பெரிய அளவில் பெய்யாத போது, ஏன் ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது என்று பெரிய கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பெரிய அளவில் மழை பெய்தது. இன்று காலையில் இருந்து சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு கொடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டது பல சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.

  • சாய்ந்தமருதில் அதாஉல்லா அபிவிருத்தி செய்தார் என்ற போலிப்பிரச்சாரம்

    – முகம்மத் இக்பால் சாய்ந்தமருது “நீர்வளங்கள் பிராந்திய முகாமையாளர் அலுவலகம்” ஒன்று சாய்ந்தமருதில் அமைய இருக்கின்றதனை தடுக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்களின் பிரதேசவாத செயல்பாட்டுக்கு எதிராக “சமூகம் என்ற போர்வையில் அதாஉல்லாவினால் விதைக்கப்படுகின்ற பிரதேசவாதமும், அதற்கான தடயங்களும்” என்னும் தலைப்பிலான கட்டுரையின் முதல் பாகத்தினை இன்று பதிவு செய்தேன்.

  • சமூகம் என்றபோர்வையில் அதாஉல்லாவினால் விதைக்கப்படுகின்ற பிரதேசவாதமும், அதற்கானதடயங்களும்

    – முகம்மத் இக்பால் சாய்ந்தமருது அரசியல்வாதிகளில் சிலர் தூரநோக்கில் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்து கொள்வதற்கும், நிரந்தரமான வாக்கு வங்கிகளை தனது ஊரில் உருவாக்கிக்கொள்வதற்கும்பயன்படுத்தும் ஓர் கருவிதான் பிரதேசவாதமாகும். இந்தபிரதேசவாதம் என்னும் கொடூர நோயினால் சமூகத்துக்குள் ஒற்றுமை இழந்து பிளவுகளும், பிரிவினைகளும், கருத்து வேறுபாடுகளும் அதிகரித்து எமது சிறுபான்மை சமூகம் பலயீனம் அடைந்துவிடும் என்ற எந்தவித கவலைகளும் இந்த அரசியல்வாதிகளிடம் இல்லை.

  • “வெஸ்ட் இண்டீஸை நாசமாக்கியது ஐ.பி.எல். தான்”

    டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. பல நல்ல வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதில்லை. இதற்கு ஐபிஎல் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கார்ல் ஹூப்பர். வெறும் ஆறு வாரம் நடக்கும் ஐபிஎல் தொடரால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் சொந்த அணிக்கு விளையாட மறுக்கிறார்கள் என கூறி இருக்கிறார்.

  • 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் பெற்ற பெறுபேறுகளை விமர்சிக்க முன்னர் நீங்கள் அறியவேண்டிய அடிப்படை உண்மைகள்

    5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் Pass marks(சித்தி பெறும் புள்ளி) என்பது வேறு Cut off marks (வெட்டுப்புள்ளி) என்பது வேறு. Pass marks- (சித்தி பெறும் புள்ளி)- ஒவ்வொரு வினாத்தாளிலும் 35 புள்ளிகளுக்கு மேல் அல்லது மொத்தமாக 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர் pass marks பெற்று சித்தியடைந்தவராவார். Cut off marks (வெட்டுப்புள்ளி )- அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித்தொகையை பெற தெரிவு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கையில் இறுதி மாணவர் பெறும் புள்ளியாகும்.

  • சாய்ந்தமருது சமூக நற்பணி மன்றம் அதாவுல்லாவுக்கு பகிரங்க மடல்

    சாய்ந்தமருது: சாய்ந்தமருதில் அமைக்கப்படவுள்ள நீர்வழங்கல் பிராந்திய காரியாலயத்தை தாங்கள் வறிந்து கட்டிக்கொண்டு தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அறிகின்றோம். இவ்விடயம் எங்கள் ஊர் மக்கள் மத்தியில் பேததிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என சாய்ந்தமருது சமூக நற்பணி மன்றம் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுக்கு பகிரங்க மடல் ஒன்றின் மூலம் கேட்டுள்ளது. அம்மடலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதானது,

  • இலங்கை கிரிக்கட் அணியில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட யாழ்ப்பாண வீரர்

    கொழும்பு:  17 வயதான விஜயகாந்த் வியஸ்காந்த்,  இலங்கை கிரிக்கெட்  தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார். கிரிக்கெட் வாரியம் தற்போதுதான் அறிவிப்பாக வெளியிட்டிருந்தாலும் கடந்த சில மாதங்களில் இவர் சில சர்வதேசப் போட்டிகளிலும் 19 வயதிற்குட்பட்ட அணியில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இவர் விளையாடியுள்ளார். ஒருநாள் சர்வதேச அணியில் மேலதிக வீரராக சேர்க்கப்பட்டுள்ள விஜயகாந்த், 19 வயதிற்குட்பட்ட முதலாவது ஆசிய உலகக் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணியிலும் இடம்பிடித்திருந்தார்.

←Previous Page
1 … 86 87 88 89 90 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar