– முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

iqbal sainthamaruthuathaullah (2)“நீர்வளங்கள் பிராந்திய முகாமையாளர் அலுவலகம்” ஒன்று சாய்ந்தமருதில் அமைய இருக்கின்றதனை தடுக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்களின் பிரதேசவாத செயல்பாட்டுக்கு எதிராக “சமூகம் என்ற போர்வையில் அதாஉல்லாவினால் விதைக்கப்படுகின்ற பிரதேசவாதமும், அதற்கான தடயங்களும்” என்னும் தலைப்பிலான கட்டுரையின் முதல் பாகத்தினை இன்று பதிவு செய்தேன்.

அந்த தடயங்களில் ஒன்றாக கல்முனையை பிரித்தாளும் அதாஉல்லாவின் அரசியல் தந்திரத்தினை கூறும் நோக்கிலேயே சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்ற கடந்தகால விவகாரத்தினை தொட்டுப்பார்க்க வேண்டி ஏற்ப்பட்டது.

மாறாக சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்றம் பற்றி முழுமையாக எழுதும் நோக்கத்தில் அல்ல.

தூங்குபவர்களை எழுப்பினால் எழும்பிவிடுவார்கள். ஆனால் தூங்குபவர்ர் போன்று பாசாங்கு செய்பவர்களை எழுப்பினால் எழும்புவார்களா ? எது எப்படியோ எழுப்புவது எங்கள் கடமை.

நுனிப்புல் மேய்பவர்களுக்கும், விடயம் தெரியாதவர்களுக்கும், உண்மை புரியாதவர்களுக்கும் அல்லது முஸ்லிம் காங்கிரஸ் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களுக்கும் நண்பர் இப்ராஹிமின் கேள்விகளும் அவரது பின்னூட்டமும் சரிபோன்றே தோன்றும்.

ஆனால் அதில் உள்ளடங்கியிருப்பது திட்டமிட்ட முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான போலி பிரச்சாரம் என்பது விடயம் தெரிந்தவர்களுக்கு மாத்திரமே புரியும்.

2004 டிசம்பர் மாதம் சுனாமி தாக்கியது. அதன்பின்பு 2005 இல் தாமரை மைதானத்தில் சாய்ந்தமருது வைத்தியசாலையை கட்டுவதுக்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

athaullah (2)
yourkattankudy/eastern-politics

சுனாமி தாக்கத்தின் பின்பு எமது பிரதேசத்தில் அரசாங்க பணத்தைவிட ஏராளமான சர்வதேச தொண்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணத்தினை செலவழித்தார்கள்.

அந்தவகையில் சாய்ந்தமருது வைத்தியசாலைக் கட்டடங்கள் கட்டுவதற்காக பல கோடி ரூபாய்களை ஜேர்மனிய செஞ்சிலுவை சங்கத்தினர் நிதி வழங்கினார்கள். அதில் OPD கட்டத்தை தவிர வேறு எந்த கட்டிடத்தையும் அதாஉல்லாவினால் உரிமைகோர முடியாது.

இந்த காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ்
எந்தவித அரசியல் அதிகாரத்திலும் இருக்கவில்லை. அதாவது எதிர்க்கட்சி வரிசையிலேயே இருந்தது.

அவ்வாறு இருக்கும்போது சாய்ந்தமருது வைத்தியசாலையை தாமரைக்குளத்து வளவில் அமைக்க முடியாது என்று கூறியதாக இங்கே குறிப்பிடப்படுவது வடிகட்டிய பொய்யாகும்.

அவ்வாறு கூறியிருந்தால் அது யார் ? எப்போது கூறியது என்று நிரூபிக்கட்டும். உத்தியோகபூர்வ பேச்சாக இருந்தால் அது கூட்டறிக்கையில் பதியப்பட்டிருக்கும்.

இன்றுவரைக்கும் சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக முப்பது மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் “ஹெல்த் செண்டர்” கட்டிடம் முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக நாப்பது மில்லியன் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.

மேலும் அம்பாறை, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, நிந்தவூர் ஆகிய பிரதேசசெயலக கட்டிடம் அமைப்பதற்கு பொதுநிருவாக உள்ளூராட்சி அமைச்சு பலகோடி ரூபாய்களை ஒதுக்கியது.

அதாவது இது தனிப்பட்ட அமைச்சுக்களின்றி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட விடயமாகும். இதில் இருபது இலட்சம் ரூபாய்கள் மட்டுமே கிழக்கு அபிவிருத்தி அமைச்சின் மூலமாக அதாஉல்லாவினால் ஒதுக்கப்பட்டது.

அப்படியிருக்கும்போது முழுப்பூசனிக்காயை மறைக்க முற்படுவது போன்று சாய்ந்தமருது பிரதேசசெயலக கட்டடத்தை காட்டி அதாஉல்லாவுக்கு பெயர் எடுத்து கொடுக்க முற்படுவது எந்தவகையில் நியாயமாகும்?

மேலும், சிங்கள ஆட்சியாளர்கள் சாய்ந்தமருதில் இருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினை அம்பாறைக்கு கொண்டுசென்றார்கள்.

அதுபோல் கல்முனை பிரதேசத்தில் இருந்த பல காரியாலயங்களை அதாஉல்லா அமைச்சர் அக்கரைப்பற்றுக்கு கொண்டு சென்றார். இவர்கள் இரண்டுபேருக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் என்ன ?

அதிகாரத்தோடு வந்து இருந்ததை கொண்டு சென்றவனைவிட, தடுக்காதவன் அல்லது தடுத்தும் முடியாமல் இருக்கின்றவன்தான் உங்களுக்கு குற்றவாளியாக தெரிகின்றதா ?

முடியுமானால் காரியாலயங்களை கொண்டு சென்றவனை விமர்சியுங்கள்.

விமர்சிக்க மாட்டீர்கள். ஏனென்றால் நோக்கம் காரியாலயங்கள் கொண்டு செல்லப்படுகின்றது என்ற கவலையல்ல.

மாறாக அதனை கூறிக்கூறி முஸ்லிம் காங்கிரசை அழித்து எப்படியாவது மகிந்தவின் கட்சியில் முஸ்லிம்கள் தொங்கி கிடக்க வேண்டும் என்பதுதான் உங்களது எதிர்பார்ப்பு. அதற்காக முஸ்லிம் காங்கிரசை அழிக்க வேண்டும்.

இன்சா அல்லாஹ் சாய்ந்தமருதில் இதுவரையில் முஸ்லிம் காங்கிரசினால் செய்து முடிக்கப்பட்ட மற்றும் செய்துகொண்டு வருகின்ற அபிவிருத்திகள் பற்றிய முழு விபரத்தையும் ஆதாரபூரவாக அதனை கட்டுரை வடிவில் வெளியிட இருக்கின்றேன்.

அப்போது முஸ்லிம் காங்கிரசின் விளம்பரம் இல்லாத அபிவிருத்திகள் பற்றிய உண்மை நிலை தெரியவரும்.