அவசரமாக கொடுக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட ‘ரெட் அலெர்ட்’

wind air seaசென்னை: தமிழகத்தில் மழை பெரிய அளவில் பெய்யாத போது, ஏன் ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது என்று பெரிய கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பெரிய அளவில் மழை பெய்தது. இன்று காலையில் இருந்து சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு கொடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டது பல சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.

முதலில் நான்கு நாட்களுக்கு முன்பே மழை பெய்ய தொடங்கியவுடன் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது. அதன்படி இன்றும் நாளையும் தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாடு வெதர்மேன் சொன்னது போலவே பெரிய மழை பெய்யவில்லை. அதிகபட்சம் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் வகையில் இரண்டு நாள் மட்டுமே மழை பெய்தது. ரெட் அலெர்ட் கொடுக்க வேண்டிய அளவிற்கு மழை பெய்யவில்லை. கனமழை பெய்யும் என்று இன்று நாள் குறிக்கப்பட்ட நிலையில், இன்றுதான் சென்னையில் பல இடங்களை வெயில் அடிக்கிறது.

இதை தொடர்ந்து நேற்று மாலை ரெட் அலெர்ட் திரும்ப பெறப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று கூறி ரெட் அலெர்ட் திரும்ப பெறப்பட்டது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படி மாற்றி மாற்றி மக்களை குழப்புவது ஏன் என்று மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

rain weather alert
yourkattankudy/weather-alert

இந்த நிலையில், சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் ஏன் மக்களை இப்படி பீதிக்கு உள்ளாக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணமே இல்லாமல், நான்கு நிறங்கள் இருக்கும் போது நேரடியாக ஏன் ரெட் அலெர்ட் கொடுக்க வேண்டும். கேரளாவில் வெள்ளம் வந்த போது கூட ஆரஞ்ச், ரெட் என்றுதான் படிப்படியாக எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் தமிழகத்தில் இப்படி நேரடியாக ரெட் அலெர்ட் கொடுத்தது ஏன், மக்களிடம் பீதியை உருவாக்க ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது இந்த ரெட் அலெர்ட் பீதி காரணமாக தேர்தல் தள்ளிப்போனதுதான் மிச்சம். தமிழகத்தில் நடக்க வேண்டிய திருவாருர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் இந்த மழை எச்சரிக்கை காரணமாக தள்ளி போய் இருக்கிறது. அதோடு தேர்தல் ஆணையம் டிசம்பரில் வெள்ளம் வர வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. டிசம்பரில் வெள்ளம் வரும் என்று தேர்தல் ஆணையத்திற்கு யார் தகவல் சொன்னது என்று விவரம் வெளியாகவில்லை. இப்படி வராத மழையையும், வராத வெள்ளத்தையும் மனதில் வைத்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பது மக்களிடையே பல்வேறு குழப்பமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதே போல் இலங்கை வானிலை அவதான நிலைய அறிக்கையை இலங்கை மக்கள் நம்புவது குறைவு. இதற்கிடையில் இலங்கையிலும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் எந்தளவிற்கு கால நிலை மாற்றமடையப் போகிறதா என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s