saudiறியாத்: சவுதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கி, இஸ்தான்புலில் உள்ள தமது நாட்டு தூதரகத்திற்கு விவாகரத்து ஆவணமொன்றை வாங்குவதற்காக சென்றார். அதன் பின் அவரை காணவில்லை. துருக்கி அதிகாரிகள் ஜமால் தூதரகத்திலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள். ஆனால், அவர் தூதரகத்திலிருந்து கிளம்பிவிட்டார் என்கிறது சவுதி. ஒரு காலத்தில் சவுதி அரச குடும்பத்தின் ஆலோசகராக இருந்தவர், பின் சவுதி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார்.

அதற்கு பிறகு அவர் சவுதி யிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து சவுதி முடியாட்சிக்கு எதிராக எழுதி வந்தார். இந்த சூழலில் அவர் அக்டோபர் 2ஆம் தேதி காணாமல் போனார்.

“அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் நான் மிகுந்த கோபம் மற்றும் வருத்தத்துக்கு உள்ளாகலாம்,” என்று கூறியுள்ள டிரம்ப், சவுதி உடனான பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படாது”

saudi
ஜமால் கசோஜி – yourkattankudy/saudi

“ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் விரும்புவது போல பாதுகாப்பு ஒப்பந்தங்களை ரத்து செய்யாமல் தண்டிக்க வேறு வழிகள் உள்ளன. அவ்வாறு ரத்து செய்து வேலைவாய்ப்புகளை பாதிக்க நான் விரும்பவில்லை,” என்றும் விவரித்திருந்தார்.

அச்சுறுத்தல்களால் எங்களை பணிய வைக்க முடியாது. தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதனைவிட பெரிதாக பதில் நடவடிக்கை எடுக்கும். உலக பொருளாதாரத்தில் சவுதி வியத்தகு பங்கை வகிக்கிறது என சவுதி தெரிவித்துள்ளது.