5000 ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம்!!

fake note - cah- moneyகொழும்பு: இலங்கையில்  5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகி, 50,000 ரூபாயாக இது அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் அதிக மதிப்புடைய பணநோட்டு 5000 ரூபாயாகும். இந்த 50,000 ரூபாய் போலி பணநோட்டுக்களை குருணாகல் பிரதேசத்தில் போலீசார் அண்மையில் கைப்பற்றியிருந்தனர். இதுகுறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதேசத்திலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரும், பிரபல பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் (டியூசன் ஆசிரியர்) ஒருவரும் இந்தச் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.போலி ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் பரவலாக புழக்கத்தில் உள்ளன. இதை தடுப்பதற்கு மத்திய வங்கியும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணநோட்டு பணியகமும் பணியாற்றி வருகிறது.

மத்திய வங்கி பணநோட்டுக்களை அச்சிடும்போது பாதுகாப்பு அம்சங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. ஆனாலும், மோசடியாளர்கள் பணநோட்டுக்களுக்கு ஒத்த போலி பணநோட்டுக்களை அச்சிட்டு மக்களிடம் புழக்கத்திற்கு விடுவதும், அதனை அதிகாரிகள் கைப்பற்றி உரியவர்களைக் கைதுசெய்வதும் தொடர் கதையாகி இருக்கிறது.

fake note - cah- money
yourkattankudy/fakenotes

பொதுவாக, இவ்வாறான மோசடியாளர்கள் செய்யும் வேலைகளை அதிக கவனம் செலுத்தினால் அன்றி சாதாரணமாக இனம் காண முடியாது.

பணத்தைக் கையாளும்போது போலி பணநோட்டு என சந்தேகம் ஏற்பட்டால், சந்தேகப்படும் பணநோட்டுக்களை உண்மையான பணநோட்டுக்களுடன் ஒப்பிட வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட பாதுகாப்பு பண்புகள் அதிலுள்ளதா என சோதிக்க வேண்டும்.

போலி பணநோட்டுக்களை கொண்டுவந்தவரின் விவரங்களைக் குறித்து வையுங்கள். உடல் தோற்றம், வந்த வாகனம், அந்த நபர் இறுதியாக இருந்த இடம் போன்ற தகவல்கள் விசாரணைகளுக்குப் பயன்தரும்.

அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணநோட்டு பணியகத்திற்கு (0112422176 – 0112326670 என்ற துரித தொலைபேசி எண்) இது பற்றி அறிவிக்கலாம்.

புழக்கத்திலுள்ள நிஜமான பணநோட்டுக்களை போன்று போலி பணநோட்டுகளை கண்டுபிடிப்பதற்கும், அவற்றை புழக்கத்தில் இருந்து அகற்றிவிடுவதற்கும் இலங்கை மத்திய வங்கியின் நாணயத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணநோட்டு பணியகத்துடன் கூட்டாக இணைந்து பணியாற்றுவதாக இலங்கை மத்திய வங்கியின் அந்த அதிகாரி தெரிவித்தார்.

போலி பணநோட்டு புழக்கத்தை தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s