திருகோணமலை மாவட்ட காணி பிரச்சினை தொடர்பாக பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்

  • எம்.ரீ. ஹைதர் அலி

43650821_10216655929700282_4298277642043392000_nதிருகோணமலை: திருகோணமலைமாவட்டத்தின், புல்மோட்டை, குச்சவெளி, தோப்பூர், நீனாக்கேணி பிரதேசங்களிலுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீர் வழங்கல், நகரத் திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில்  11.10.2018 பி.ப.2.30 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

இந்தக்கூட்டத்தில் பிரதியமைச்சர் பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தெளபீக், ஏ.எல்.நசீர், எம்.ஐ.எம்.மன்சூர், முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.பி.முபாரக், மாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பகுமார, குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன், சேருவில பிரதேச செயலாளர் பி.ஆர்.ஜயரத்தன, காணி அமைச்சின் மேலதிக செயலாளர்,பிரதேச சபை உறுப்பினர்களான மீஸான்,அமீன் பாரிஸ், புல்மோட்டை பிரதேச ஜம்இய்யத்துல் உலமாத்தலைவர் மௌலவி அப்துல் சமத், பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் புல்மோட்டை பிரதேசத்தில் இடம்பெற்று வரும் காணி பிரச்சினை தொடர்பாக பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

01. காணி அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் காணி அனுமதிப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுத்தல்.

02. காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்ட காணிகளுக்குள் வன பரிபாலன திணைக்களத்தால் இடப்பட்டுள்ள கற்களை அகற்றி மக்கள்
குடியமர்வதற்கும், பயிர்ச் செய்கையை மேற்கொள்ளவும் அனுமதித்தல்.

03. மக்களின் காணிகளுக்குள் புதை பொருள் காணிகள் என்பதை ஆராய்ந்து மக்களிடம் கையளித்தல்.

04. படையினருக்கு பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட காணிகளுக்கு மேலதிகமாக உள்ளவற்றை விடுவித்தல்.

05. பிரதேச உரிமையாளரின் காணிகளை சுத்தம் செய்ய அனுமதித்தல்.

06. புல்மோட்டை, குச்சவெளி பிரதேசத்தில் ஒவ்வொரு பௌத்த கோவிலுக்கும் 500 ஏக்கர் வீதம் அளவிட வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

43650821_10216655929700282_4298277642043392000_n

குச்சவெளி
06. குச்சவெளி மகா ஆலங்குளம் முஸ்லிம்களின் காணிகளை சுத்தப்படுத்த அனுமத்தித்தல்.

தோப்பூர் செல்வ நகர் நீநாகேணி
07. குறித்த 49 ஏக்கர் காணிகளை விடுவித்து மக்களிடம் கையளித்தல்.

கிழக்கு மாகாணத்தின் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணிக்கும், மாகாண ஆளுநருக்குமிடையிலான விசேட கூட்டம் அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ளதுடன், மேலதிக காணிகளையும்,விவசாய நிலங்களையும் விடுவிப்பது தொடர்பில் வணபரிபாலன திணைக்களத்துடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உரிய முறையில் காணிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பிலும், ஏலவே காணிக்கச்சேரி நடாத்தப்பட்டு அடையாளம்காணப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும் பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரினால் அரசாங்க அதிபருக்கு பணிப்புரை வழங்கபட்டது.

அத்துடன், புல்மோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனுமதி பத்திரமுள்ள காணிக்குள் பௌத்த பள்ளிக்கூடம் ஒன்றை நிறுவ பௌத்த பிக்கு எடுத்த முயற்சி தொடர்பாக பிரதேச மக்களுடன் முறுகல் ஏற்பட்டது இது தொடர்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் அரசாங்க அதிபரிடம் கேள்வி எழுப்ப அவற்றை தடை செய்வதற்கான ஏற்பாட்டை உடனடியாக தாம் மேற்கொள்வதாகவும் வாக்குறுதி அளித்ததுடன், குச்சவெளி பிரதேச மகா ஆலங்குளம் தொடர்பாக அரசாங்க அதிபர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

கால்நடைகளுக்கான மேச்சல் நிலம் தொடர்பாகவும் அரசாங்க அதிபரிடத்தில் முன்வைக்கப்பட்டது. தோப்பூர் நீநகேணி 49 ஏக்கர் காணியை விடுவிப்பது தொடர்பாக ஆளுநருடன் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்தாலோசித்து விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்

அடுத்த வாரம் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையை இடம்பெறவுள்ளஜனாதியின் விசேட செயலணி கூட்டத்தில் அதில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கயந்த கருணாதிலக,கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s