Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “மகிந்தவை பிரதமர் பதவியில் அமர்த்தி புதிய அரசாங்கத்தை அமைப்பதைத் தவிர வேறு வழி எனக்கில்லை” – ஜனாதிபதி

    கொழும்பு: மகிந்த ராஐபக்ஷவை பிரதமராக நியமித்தது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நல்லாட்சி அரசாங்கம் எனும் கருப்பொருளை ரணில் விக்கிரமசிங்க மிக வெளிப்படையாகவே துஷ்பிரயோகம் செய்துவிட்டார்” என சிறிசேன குறிப்பிட்டுள்ளார். “ரணில் விக்கிரமசிங்க பொதுவாகவே கூட்டுச் செயற்பாடற்ற, தன்னிச்சையான தீர்மானங்ளை எடுக்கும் முரட்டுத்தனமான பிடிவாதமிக்க முறையிலேயே அரசாங்கத்தில் செயற்பட்டார்; அவரின் நடவடிக்கையால் நாட்டில் ஊழலும் மோசடியும் தலைதூக்கின” என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • “கொழும்பு கப்பல்தளத்தை இந்தியாவுக்கு தர மறுத்ததே ரணிலை அகற்றுவதற்கான காரணம்”

    கொழும்பு: கொழும்பு மேற்கு கப்பல் தளத்தை இந்தியாவுக்குத் தருவதற்கான பரிந்துரை நிராகரிக்கப்பட்டது பிரதமர் மாற்றத்துக்கான தாக்கத்தை செலுத்திய காரணங்களில் ஒன்று என இலங்கை சுதந்திரக் கட்சியின் மூத்த எம்.பி. நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை சுதந்திர கட்சி சார்பில் கொழும்புவில் சனிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இவர், ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவைyk கொல்வதற்கான முயற்சி குறித்து உரிய விசாரணை முன்னெடுக்கப்படாததும் அக்கறை செலுத்தாதும் இந்த மாற்றத்துக்கான காரணிகளில் மற்றொன்று என்று நிமல் குறிப்பிட்டார்.…

  • ரணிலிடமிருந்து வாகனங்கள், பாதுகாப்பு பறிப்பு

    கொழும்பு: பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக அதிரடியாக வெள்ளிக்கிழமை நியமித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா. ஆறு எம்.பி.க்களை வைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

  • திடீர் ஆட்சி மாற்றம் ஏன் ? இது சாத்தியப்படுமா?

    கொழும்பு: பிரதமர் பதவியிலிருந்து ரணில் ராஜினமா செய்திருக்க வேண்டும். அல்லது ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாக ஜனாதிபதியினால் அறிவிப்பு செய்திருக்க வேண்டும். எதுவுமில்லாமல் மஹிந்த ராஜபக்ச பிரதம மந்திரியாக திடீரென நியமிக்கப்பட்ட அறிவிப்பானது நாட்டில் திடீர் அரசியல் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

  • மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்

    சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்.

  • தென்கிழக்கு பல்கலைக் கழக நிர்வாக அலுவலகத்தை ஆக்கிரமித்த மாணவர்கள் கைது

    ஒலுவில்: கடந்த இரண்டு வார காலமாக, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை போலீஸார் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்கள் அனைவரையும் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • “ஜமால் கஷோக்ஜி திட்டமிட்டே கொல்லப்பட்டார்”

    றியாத்: சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி திட்டமிட்டே கொல்லப்பட்டார் என்கிறார்  சவுதி அரேபிய அரசு வழக்குரைஞர் அல்-ஏக்பாரியா தெரிவித்துள்ளார். சவுதி-துருக்கி கூட்டு நடவடிக்கைப் படை அளித்த தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறியுள்ளார் என சவுதி அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

  • ஸ்கைப் அழைப்பு மூலமாக திட்டமிடப்பட்ட ஜமால் கசோக்கியின் கொலை !

    இஸ்தான்புல்: பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலையை பின்புறத்தில் இருந்து இயக்கிய மாஸ்டர் மைண்ட் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஒரு ஸ்கைப் அழைப்பு  மூலம் இந்த மொத்த கொலையும் அரங்கேறி இருப்பது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சவுதி அரசாங்கம் இந்த கொலையை செய்ததை ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அறியாமையால் இந்தியாவில் தொடரும் பரிதாபம்: பணத்திற்காக 9 வயது சிறுவன் நரபலி!

    ஒடிசா: கோடிக்கணக்கில் பணம் தேவை என்ற வேண்டுதலுக்காக ஒடிசாவில் 9 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கிறான். இந்தியா, ஒடிசா மாநிலம் போலாங்கிர் மாவட்டத்தில் உள்ள சுந்திமுந்தா என்று கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த பகுதியை சேர்ந்த ஞானஷ்யாம் ராணா என்ற 9 வயது சிறுவன்தான் நரபலி கொடுக்கப்பட்டது. இவன் இந்த மாதம் 13ம் தேதி காணாமல் போய் இருக்கிறான். இதையடுத்து இவனது பெற்றோர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார்கள். ஆனால் ஒருவாரம்…

  • அப்பிள் வாட்ச் 4

    அப்பிள் நிறுவனம் தனது புதிய வாட்ச் சீரிஸ் 4. கடந்த மாதம் அறிமுகம் செய்தது. புதிய வாட்ச் மாடல்களின் முன்பதிவு இந்தியாவில் சமீபத்தில் துவங்கியது. முன்பதிவு துவங்கிய சில மணி நேரங்களில் விற்றுத் தீரந்தது. இந்நிலையில் புதிய அப்பிள் வாட்ச் சீரிஸ் 4 விற்பனை இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.

  • யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையில் அதிகரித்திருக்கும் போதைப் பொருள் கடத்தல்

    கொழும்பு: இலங்கையின் தலைநகரத்தில் மட்டுமே புழக்கத்திலிருந்த ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள், இப்போது, சிறிய கிராமங்களில் கூட விற்பனைக்கு வந்து விட்டன. சமூக மற்றும் சமய ஒழுங்குகளையும் பேணுவதில் அதிக கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்த ஊர்களில் கூட, ஹெரோயின் விற்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஹெராயின் வைத்திருந்த சிலர் கைது செய்யப்பட்டார்கள்.

  • இந்திய இராணுவத்தில் உளவு பார்த்த பாக்கிஸ்தான் பிரஜை

    டில்லி: இந்திய ராணுவத்தின் முக்கியத் தரவுகளை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புடன் பகிர்ந்து கொண்டதாக, உத்தரப் பிரதேச மாநில  சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் உளவு பார்ப்பதற்காக பாகிஸ்தான் அவரை இந்தியாவுக்கு அனுப்பியிருக்க வாய்ப்பு உண்டு என்று உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

←Previous Page
1 … 85 86 87 88 89 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar