சாய்ந்தமருது சமூக நற்பணி மன்றம் அதாவுல்லாவுக்கு பகிரங்க மடல்

athaullah (2)சாய்ந்தமருது: சாய்ந்தமருதில் அமைக்கப்படவுள்ள நீர்வழங்கல் பிராந்திய காரியாலயத்தை தாங்கள் வறிந்து கட்டிக்கொண்டு தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அறிகின்றோம். இவ்விடயம் எங்கள் ஊர் மக்கள் மத்தியில் பேததிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என சாய்ந்தமருது சமூக நற்பணி மன்றம் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுக்கு பகிரங்க மடல் ஒன்றின் மூலம் கேட்டுள்ளது.

அம்மடலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதானது,

கல்முனை மற்றும் சம்மாந்துறை தொகுதி மக்கள் தங்களது குடிநீர்க் கட்டணங்களை செலுத்துவதிலும் ஏனைய நீர்வழங்கல் சேவைகளைக் பெற்றுக்கொள்வதிலும் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். இதனைக் கருதிற்கொண்டு இப்பிரதேச மக்கள் பிரதிநிதிகள் வேண்டிக் கொண்டதற்கினங்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்படி பிராந்திய காரியாலயத்தினை சாய்ந்தமருதில் அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்ததுடன் அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

அக்கரைப்பற்றிலுள்ள நீர்;வழங்கல் பிராந்திய காரியாலயத்தை இல்லாமலாக்கி விட்டு சாய்ந்தமருதில் இக்காரியாலயத்தை அமைப்பது மாதிரி அக்கரைப்பற்று மக்கள் மத்தியில் பிரதேசவாதக் கருத்தை விதைத்து, இக்காரியாலயம் சாய்ந்தமருதில் அமைப்பதனால் கல்முனை மற்றும் சம்மாந்துறை தொகுதி மக்கள் அடையவிருக்கும் அனுகூலங்களை மறைத்து தங்களது அரசியல் இருப்புக்காக அக்கரைப்பற்று மக்களை பகடைக்காய்கலாக பயன்படுத்துவதை காலாகாலமாக நாங்கள் பார்த்த வண்ணமுள்ளோம்.

கல்முனையிலுள்ள நீதிமன்றங்கள் நிந்தவூர், சம்மாந்துறை மக்களின் தேவை மற்றும் நலன்களை கருதிற்கொண்டு சம்மாந்துறையில் நீதிமன்றங்கள் திறக்கப்பட்டன. அந்நேரத்தில் கல்முனையிலுள்ள சட்டத்தரணிகள் தங்களது வருமானங்கள் குறைவடையும் என்பதற்காக தடுப்பதற்கு முயற்சிக்கவில்லை. அதுபோலவே கல்முனை பிரதேச அரசியல்வாதிகளும் நீதிமன்றங்கள் கல்முனையில் மட்டும்தான் இருக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கிக்கொண்டு தடுப்பதற்கு முயற்சிக்கவில்லை. மாறாக அம்மக்களின் நிர்வாக ரீதியாக நடவடிக்கைகளை அவர்களது பிரதேசங்களில் மேற்கொள்வதற்கு நீதிமன்றங்கள் தேவை என்பதனை உணர்ந்து ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

athaullah (2)
yourkattankudy/eastern-politics

ஒரு நிர்வாகக் காரியாலயத்தினை மக்கள் நலன்கருதி பெரும் மனங்கொண்டு ஒத்துழைப்பு வழங்கி திறப்பதற்கு தங்களால் முடியாமல் உள்ளமை தங்களது அரசியல் இரட்டை முகத்தை சாய்;ந்தமருது மக்கள் மத்தியில் புடம்போட்டு காட்டியுள்ளது.

தாங்கள் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சராகவிருத்த காலத்தில் சாய்ந்தமருதுக்கு தனியாகப் பிரித்து நகர சபை தருவோம் அல்லது நான்காகப் பிரித்து நகர சபை தருவோம் என்றெல்லாம் நீங்கள் வழங்கிய வாக்குறுதி எல்லாம் சாய்ந்தமருது மக்களின் வாக்குகளைப் பெருவதற்காகவே அன்றி உண்மையாக எமது மக்களின் தேவையாகவிருந்த நகர சபையை வழங்கும் நோக்கம் இருந்திருக்கவில்லை என்பது இந்த சாதாரண நீர்வழங்கல் பிராந்தியக் காரியால விடயம் தங்களின் நரித்தனத்தை எடுத்துக்காட்டியுள்ளது.

சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை விடயத்தை வைத்து எமதூர் மக்களையும் கல்முனை மக்களையும் பிரித்தாலும் தந்திரோபாயத்தை கனகச்சிதமாக செய்து வந்துள்ளீர்கள் என்பதும் இன்று எம்மக்கள் மத்தியில் உணரப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைக்கான கூலியை அடுத்துவரும் உங்கள் தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே எமது கல்முனை மற்றும் சம்மாந்துறை தொகுதி மக்கள் தங்களுக்கான நீர்வழங்கல் தொடர்பான சேவைகளை அவர்களின் காலடியில் பெற்றுக்கொள்வதற்கு இப்பிராந்தியக் காரியாலயம் எம்மக்களுக்கு முக்கிய தேவையாகும். இதனை வழங்குவது அரசியல் தலைமைகளின் கடமையாகும். இந்த யதார்த்த நிலமையினை புரிந்து கொண்டு தடுக்கும் முயற்சியிலிருந்து ஒதுங்கி இவ்விடயத்தில் தங்களின் தாராள மனப்பாங்கினை வெளிப்படுத்துமாறு சாய்ந்தமருது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அம்மடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s