5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் பெற்ற பெறுபேறுகளை விமர்சிக்க முன்னர் நீங்கள் அறியவேண்டிய அடிப்படை உண்மைகள்

news_2010_10_images_newsgrade%205[1]5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் Pass marks(சித்தி பெறும் புள்ளி) என்பது வேறு Cut off marks (வெட்டுப்புள்ளி) என்பது வேறு. Pass marks- (சித்தி பெறும் புள்ளி)- ஒவ்வொரு வினாத்தாளிலும் 35 புள்ளிகளுக்கு மேல் அல்லது மொத்தமாக 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர் pass marks பெற்று சித்தியடைந்தவராவார். Cut off marks (வெட்டுப்புள்ளி )- அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித்தொகையை பெற தெரிவு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கையில் இறுதி மாணவர் பெறும் புள்ளியாகும்.

இது பற்றி தெளிவாக கல்வி அமைச்சின் இணைய தளத்தில் காணலாம்.

http://www.moe.gov.lk/english/index.phpoption=com_content&view=article&id=1382:pass-மrks-and-the-cut-off-மrks-of-the-scholarship-examination&catid=344&Itemid=771

இங்கு விடயம் என்னவென்றால் வெட்டுப்புள்ளியைத்தான் Pass marks என கருதி நாம் எமது இளம் சந்ததியினரை விமர்சிக்கின்றோம்.

வெட்டுப்புள்ளியினை பெற்று புலமைப்பரிசில் பெற தகுதியான மாணவர்களை பாராட்டுவதில் தவறில்லை.மாறாக வெட்டுப்புள்ளிக்கும் Pass marks க்கும் இடைப்பட்ட புள்ளிகளை பெற்ற சிறந்த மாணவர்கள் பரீட்சையில் தோல்வி அடைந்தவர்களாக அடையாளம் காட்டப்படுவதுதான் மிகவும் தவறான விடயமாகும்.இம்மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று உதவித் தொகை பெற மட்டுமே தகுதி பெறவில்லை .

news_2010_10_images_newsgrade%205[1]

yourkattankudy/grade5

எனவே இவர்கள் பெற்ற சிறந்த பெறுபேறுக்காக இவர்களை பாராட்டப்போகின்றோமா? அல்லது புலமைப்பரிசில் பணத்தை பெற தகுதி பெறவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை விமர்சிக்கப்போகின்றோமா?

கடந்த கால O/L A/L பெறுபேறுகளை ஒப்பீடு செய்யும் போது 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்ற வெட்டுப்புள்ளி என்பது குறிப்பிட்டளவு செல்வாக்கு செலுத்தவில்லை என்பதை அறிய முடியும்.

எனவே வெட்டுப்புள்ளிக்கு குறைவாக பெற்றாலும் pass marks இனை பெற்ற மாணவர்களையும் பாராட்டுவோம். அவர்களை மேலும் உச்சகமூட்டி எதிர்கால வாழ்க்கையின் துறையினை தீர்மானிக்கும் பிரதான பரீட்சைகளில் (O/L,A/L) சிறந்த பெறுபேறுகளைப்பெற அவர்களை தயார்படுத்துவோம்.

  • Abu YusufKattankudy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s