இஸ்தன்புல்: சவுதி பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போன பிரச்சனையில், ஒரு அப்பிள் கடிகாரம் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. இது அமெரிக்கா, சவுதி இடையே போரை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. சவுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போய் இதோடு இரண்டு வாரம் ஆகிவிட்டது. சவுதியை சேர்ந்த ஜமால் கசோக்கி உலகின் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்களின் ஒருவர்.
கடந்த சில வருடங்களாக இவர் சவுதிக்கு எதிராக எழுதி வந்தார். முக்கியமாக சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக எழுதி வந்தார்.
இவர் கடந்த செப்டம்பர் 28ம் தேதி துருக்கி வந்துள்ளார். அங்கு இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்கு இவர் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். அதுகுறித்த ஆவணங்களை கொடுக்க வேண்டும் என்று இவர் அங்கு சென்றுள்ளார். ஆனால் உள்ளே போனவர் வெளியே வரவேயில்லை.
அதன்பின் அவர் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. இவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் செய்திகள் வருகிறது. சவுதியை சேர்ந்த இவரை சவுதி அரசாங்கமே கொன்றுவிட்டதாக செய்திகள் வருகிறது. சவுதி அரசு அனுப்பிய கொலைகார டீம் ஒன்று இவரை கொன்றுள்ளதாக துருக்கி பத்திரிகைகள் எழுதி வருகிறது. இதற்கு ஆதாரமாக பல சிசிடிவி காட்சிகளையும் வெளியே விட்டுள்ளது. இவரை 15க்கும் அதிகமான உலக நாடுகள் தேடுகிறது.
இந்த நிலையில் இதில் நிறைய சந்தேகங்கள் நிலவி வரும் நிலையில், ஜமால் கசோக்கி கையில் கட்டியிருந்த அப்பிள் கடிகாரம் இதில் முக்கிய சாட்சியமாக மாறியுள்ளது. ஜமால் கசோக்கி அந்த தூதரகத்துக்கு உள்ளே நடந்த எல்லா பிரச்சனைகளையும் தனது ஆப்பிள் வாட்சில் பதிவு செய்துள்ளார்.
இந்த ஆப்பிள் வாட்ச் அவரது ஆப்பிள் போனுடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப்பிள் போன் அந்த கட்டிடத்திற்கு வெளியில் நின்ற அவரது காதலியிடம் இருந்துள்ளது. ஆப்பிள் வாட்சில் பதிவு செய்யப்பட்ட விஷயங்கள் இந்த ஆப்பிள் போனுக்கும் வந்து இருக்கிறது. அதன்படி அவர் கொடுமைபடுத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆப்பிள் போனிற்கு வந்த பதிவுகளில், ஜமால் கசோக்கி அழுவதும், கத்துவதும் பதிவாகி உள்ளது. அவரை சிலர் அடிக்கும் சத்தமும் பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக ஜமால் கசோக்கி 90 சதவிகிதம் கொலை செய்யப்பட்டு இருக்கவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.