ஜனாதிபதி நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் சு.க. அமைப்பாளர்களுக்கு அவசர அழைப்பு!

SLFP[1]கொழும்பு: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் அவசரமாக இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து அதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

கட்சியின் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாத சமயத்தில், இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்புத் தோன்றியுள்ளது.

ஜனாதிபதி நாடு திரும்பிய பின் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு வரும் 29ம் திகதி கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment