பூமியும் செவ்வாயும்..

tue– SHM

நியுயோர்க்: பூமியிலிருந்து செவ்வாய்க்குப் போயுள்ள மங்கள்யான் விண்கலம் குறித்துத்தான் இந்தியாவில் மாத்திரமன்றி உலகம் முழுவதும் இன்று காலை முதலே பேச்சாக உள்ளது. மங்கள்யான் வெற்றி மூலம் செவ்வாய் கிரகத்தை எட்டிப் பிடித்த முதல் ஆசிய நாடு என்ற பெருமயை இந்தியா பெற்றுள்ளது.

மேலும் செவ்வாய் கிரக சுற்றுப்பாதைக்குள் நுழைந்த 4வது நாடு என்ற சிறப்பும் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், பூமிக்கும், செவ்வாய்க்கும் இடையிலான சில சுவாரஸ்யமான புள்ளி விவரங்களை பள்ளிக்கூடத்தில் அறிவியல் படித்தபோது இதுகுறித்து நாம் படித்திருக்கக் கூடும்.

பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் இடையே அளவில் நிறைய வித்தியாசம் உள்ளது. பூமியின் ஆரமானது 6378 கிலோமீட்டர் ஆகும். அதுவே செவ்வாய் கிரகத்தின் ஆரம் (சயனரைள) 3397 கிலோமீட்டர் ஆகும்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரமானது 14 கோடியே 95 லட்சத்து 97 ஆயிரத்து 891 கிலோமீட்டர் ஆகும். செவ்வாய்க்கும், சூரியனுக்கும் இடையிலான தூரம் 22 கோடியே 79 லட்சத்து 36 ஆயிரத்து 637 கிலோமீட்டர் ஆகும்.

பூமியின் வளிமண்டலத்தில் அதிகம் நிறைந்திருப்பது நைட்ரஜன்தான். அதாவது 77 சதவீதம் நைட்ரஜன் உள்ளது. அடுத்து ஒக்சிஜன். இது 21 சதவீதமாகும். இவை போக நீராவி 1 சதவீதமும், ஓர்கன் 1 சதவீதமும் உள்ளன.

செவ்வாயின் வளிமண்டலத்தில் அதிகம் இருப்பது கார்பன் டை ஒக்சைட்தான். அதாவது 95.32 சதவீதம் கார்பன் டை ஒக்சைட்தான். நைட்ரஜனின் அளவு 2.7 சதவீதம்தான். ஒக்சிஜனோ வெறும் 0.13 சதவீதம்தான்.

வளிமண்டல அழுத்தமானது பூமியில் 1013 மில்லி பார் அளவில் உள்ளது. அது செவ்வாயில் வெறும் 7.5 மில்லி பார் மட்டுமே.

ஈர்ப்பு விசையின் அளவானது பூமியில் 2.66 ஆகவும், செவ்வாயில் 1 என்ற அளவிலும் உள்ளது.

பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரமாக உள்ளது. செவ்வாயில் அது 24 மணி 37 நிமிடமாக இருக்கும். பூமியில் வருடத்திற்கு 365 நாட்களாகும். அதுவே செவ்வாயில் 687 பூமி நாட்களாகும். அதாவது பூமியில் உள்ள 687 நாட்கள் செவ்வாயில் ஒரு வருடத்திற்குச் சமமாகும்.

பூமியின் தரைப்பரப்பு வெப்பநிலையானது சராசரியாக 14 டிகிரி செல்சியஸ் ஆகும். அதுவே செவ்வாயில் மைனஸ் 63 டிகிரி செல்சியஸ் ஆகும்.

Published by

Leave a comment