ஒரு கோடி ரூபா பெறுமதியான 20 தங்க பிஸ்கட்டுகளை கடத்திவர முயன்ற விமான நிலைய ஊழியர் கைது!

130217132602_gold_bars_304x171_reuters[1]கொழும்பு: டுபாயிலிருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 20 தங்க பிஸ்கட்டுகளை கால்களில் கட்டி மறைத்து விமான நிலையத்துக்கு வெளியே கொண்டு வர முற்பட்ட ஊழியர் ஒருவர் உட்பட இரண்டு பயணிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாயிலிருந்து வந்த இரண்டு பயணிகளும் தாம் கொண்டு வந்த 20 தங்க பிஸ்கட்டுகளையும் விமான நிலையத்திலுள்ள தீர்வையற்ற கடையொன்றின் ஊழியரிடம் கையளித்துவிட்டு வெளியேறியுள்ளனர். தீர்வையற்ற கடையின் ஊழியர் தங்க பிஸ்கட்டுகளை விமான நிலையத்துக்கு வெளியே எடுத்துச் செல்வதற்காக தனது இரண்டு கால்களிலும் வைத்து கட்டியுளார்.

இச்சமயத்தில் ஸ்தலத்துக்கு வந்த விமான நிலைய அதிகார சபையின் பாதுகாவலர்கள் 20 தங்க பிஸ்கட்டுகளுடன் ஊழியரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஊழியரின் உதவியுடன் விமான நிலையத்திலிருந்து வெளியேறிய இரண்டு பயணிகளையும் கைது செய்து சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். நேற்று அதிகாலை 1.45 க்கு டுபாயிலிருந்து வந்த ஈ.கே. 349 ரக விமானத்தில் வந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 தங்க பிஸ்கட்டுகளும் 2 கிலோ எடை கொண்டவை என்றும் இவற்றின் பெறுமதி இலங்கை நாணயப் படி ஒரு கோடி ரூபா என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

Published by

Leave a comment