Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காரைதீவு பிரதேச செயலகத்துக்கு எதிராக சாய்ந்ததருது ஜூம்ஆ பள்ளி நிர்வாகம் பொலிஸில் முறைப்பாடு

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: காரைதீவு முச்சந்தியிலுள்ள சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணிக் கூடாக காரைதீவு பிரதேச சபையினர் எல்லை வேலி அமைத்திருப்பதாக தெரிவித்து பிரதேச சபைக்கு எதிராக சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் சம்மாந்துறைப் பொலிஸில் செவ்வாய்க்கிழமை (30) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • இஸ்லாத்தின் பெயரால் உருண்ட மற்றுமொரு தலை!

    – AF-90 லண்டன்: கடந்த வருடம் சிரியாவில் வைத்துக் கடத்தப்பட்ட பிரிட்டிஸ் பிரஜையான அலன் ஹென்னிங் என்பவரை சிரச்சேதம் செய்யும் வீடியோவை சற்று முன்னர் இஸிஸ் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அலன் கொல்லப்பட்டதாக பிரிட்டன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

  • ‘அசின் விராது தேரரை நாட்டுக்குள் வரவழைத்தமை மூலம் அரசாங்கம் முஸ்லிம்களின் ஆதரவினை இழந்துள்ளது’

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: சர்வதேச ரீதியில் கடும்போக்கு வாதி என அடையாளம் காணப்பட்ட மியன்மாரின் அசின் விராது தேரருக்கு இலங்கை அரசாங்கம் வீஸா வழங்கியமை தேசத்திற்கு செய்யும் துரோகச் செயலாகும் என முஸ்லிம் உரிமைகளுக்கான ஜனநாயக அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கட்டாரில் ஹஜ்ஜுப் பெருநாள் விளையாட்டு நிகழ்ச்சி

    – அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி الســـــــــــلام عليــــكم ورحمــــــة الله وبركاتــــــــــه ،،،،، கட்டார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான ஹஜ்ஜுப் பெரு நாள் விளையாட்டு நிகழ்ச்சி. ஏற்பாடு Sri Lanka Da’wa Centre – Qatar இடம் MIC Sports Club- Ummsaeed Time 05/10/2014 (காலை 9 இலிருந்து )

  • 1274 மில்லியன் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி திட்டங்களை ஆராயும் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது

    – பழுலுல்லாஹ் பர்ஹான் அம்பாறை: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அங்கீகாரத்தில் அம்பாறை மாவட்டத்தில் இவ் வருடம் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற விஷேட மீளாய்வு கூட்டம் 03-10-2014 இன்று வெள்ளிக்கிழமை இம் மாவட்ட செயலக பிரதான கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

  • 2 மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகள் அரபாவில்!

    – MJ மக்கா: அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான இன்றைய அரபா நாளில், 2 மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகள் தற்பொழுது அரபா மைதானத்தில் தரித்து நிற்கின்றனர். இன்று காலையிலிருந்து அரபா மைதானத்தை நோக்கி ஹாஜிகள் விரைந்தனர்.

  • வெளிநாட்டு யாத்திரிகர்கள் 1.4 மில்லியன்: சவுதி அரேபியா

    – MJ மக்கா: நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவுபெறும் வெளிநாட்டினரின் ஹஜ்ஜிற்கான வருகையின் பிரகாரம் 1.4 மில்லியன் வெளிநாட்டு யாத்திரிகர்கள் ஹஜ் கடமைக்காக வந்திருப்பதாக சவுதி அரேபியாவின் ஹஜ் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. ‘ஹஜ்ஜூல் அக்பர்’ எனும் பெரிய ஹஜ் இம்முறை இடம்பெறுவதால் அதிகளவான உள்ளுர் யாத்திரிகர்கள் இன்று அரபாவில் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

  • ஹஜ்ஜின்போது ‘செல்பி’ எடுப்பது பற்றி மார்க்க அறிஞர்களின் கருத்துக்கள்….

    மக்கா: ஹஜ் கடமையின்போது யாத்திரிகர்களிடம் சுயமாக படம்பிடித்துக்கொள்ளும் ‘செல்பி’ படங்கள் பிரபலமடைந்து வரும் நிலையில், அதுகுறித்து மதத்தலைவர்களிடமிருந்து எதிர்ப்புகளும் ஆதரவுகளும் அதிகரித்துள்ளன.

  • 7000 கி.மீ. தூரத்தை தனது வாகனத்தில் கடந்து ஹஜ்ஜூக்கு வந்துசேர்ந்த இஸ்லாத்தைத் தழுவிய பிரான்ஸ் தம்பதி!

    – MJ மக்கா: பிரான்ஸ் நாட்டின் பிரஜையான அலக்ஸாண்டர், 6 வருட இஸ்லாமிய ஆய்வின் பின்னர் இஸ்லாத்தைத் தழுவி தனது பெயரை ஹம்ஸா என மாற்றிக்கொண்டார். இவர் தனது மனைவியுடன் முதன் முதலாக ஹஜ் கடமையை நிறைவேற்ற புனித மக்காவிற்கு வந்து சேர்ந்திருக்கின்றார்.

  • காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் 20 மாணவர்கள் சித்தி

    – அல்தாப் காத்தான்குடி: காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் இவ்வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய 73 மாணவர்களில் 20 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர். இது 27.40 வீதமாகும். அத்துடன் மாவட்டத்தில் அதி கூடிய 193 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்திற்குத் தெரிவான மாணவன் எம்.ஏ அர்ஷக் அகமட் எமது பாடசாலைக்கு பெருமையை தேடித்தந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எஸ். அகமட் தெரிவித்தார்.

  • காத்தான்குடியில் அமைக்கப்படும் இஸ்லாமிய நூதனசாலையின் அபிவிருத்தி பணிகள் துரிதம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: முஸ்லிம்களின் பாரம்பரியம் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் இலங்கையில் அமைக்கப்படும் முஸ்லீம்களின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை (மியூசியம்) கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் மட்டக்களப்பு – கல்முனை, காத்தான்குடி பிரதான வீதியில் பழைய காத்தான்குடி நகர சபை கட்டிடத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.

  • அல்மனார்: பாடசாலைக் கல்வியுடனான ஷரீஆ கற்கைக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரள்

    – அல் மனார் ஊடகப்பிரிவு காத்தான்குடி: அல் மனார் நிறுவனத்தில் பாடசாலைக் கல்வியுடனான ஷரீஆ கற்கைக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. ஆண்டு 9 க்கு சித்தியடைந்ந மாணவர்களிடமிருந்து 2015 ஆம் ஆண்டு முதல் தங்கியிருந்து கல்வி கற்க விரும்பும் ஆண்கள் எதிர்வரும் 15.10.2014 திகதிக்கிடையில் தமது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புமாறு கோரப்படுகின்றது.

←Previous Page
1 … 650 651 652 653 654 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar