லண்டன்: கடந்த வருடம் சிரியாவில் வைத்துக் கடத்தப்பட்ட பிரிட்டிஸ் பிரஜையான அலன் ஹென்னிங் என்பவரை சிரச்சேதம் செய்யும் வீடியோவை சற்று முன்னர் இஸிஸ் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அலன் கொல்லப்பட்டதாக பிரிட்டன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சிரியாவின் அகதிக் குழந்தைகளுக்கு உணவுப்பொருட்களை தனது சொந்தச் செலவில் எடுத்துச் சென்றவேளை இஸிஸ் அமைப்பால் கடத்தப்பட்டு பணயக்கைதியாக நடத்தப்பட்டார்.
“எனது கனவர் ஓர் டெக்ஸி சாரதி. சாதாரண மனிதர். ஓர் அப்பாவி. நல்ல மனிதாபிமானம் உடையவர்.சிரியாவில் அகதிகளாய் பரிதவிக்கும் முஸ்லிம் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற நல்லென்னத்திலேயே எனது கனவர் அங்கு சென்றார். அவரை நீங்கள் தற்பொழுது கடத்தி வைத்துள்ளீர்கள். மனிதாபிமானத்தின் அடிப்படையில் நீங்கள் எனது கனவரை விடுவியுங்கள்” என அலனின் மனைவி கடந்த மாதம் இஸிஸ் அமைப்பிற்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்திருந்தார்.
இந்நிலையில் அலன் கொல்லப்பட்டார் என்பதை பிரிட்டன் ஊர்ஜிதப்படுத்தியிருக்கின்றது.
பிரித்தானியாவில் ஏற்பட்டிருக்கும் ஓர் அச்ச சூழ்நிலையில் முஸ்லிம்கள் பல சங்கடங்களை அண்மைக்காலமாக எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் லண்டன் மற்றும் லீட்ஸ் பள்ளிவாயல் இமாம்கள் “இஸிஸ் அமைப்பின் செயற்பாடுகள் இஸ்லாத்தற்கு அப்பாற்பட்டவை மனிதாபிமானம் அற்றவை. இஸ்லாம் ஒருபோதும் இவ்வாரான மிருகத்தனமான விடயங்களைத் தூண்டாது” என தெரிவித்திருக்கின்றனர்.
இஸ்லாத்துக்கு எதிர்மாறாக இயங்கும் இஸிஸ் அமைப்பை இஸ்லாமியர் அல்லாத யாரோ வெளியிலிருந்து இயக்குவதாக பிரிட்டன் முஸ்லிம்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Published by


Leave a comment