காத்தான்குடி: புதிய காத்தான்குடி 01 பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாயலில் இயங்கி வரும் தாருல் புர்கான் பகுதி நேர அல்குர்ஆன் மனன பீடத்தில் 30 ஜுஸ்உக்களையும் மனனமிட்டு 01வது ஹாபிழாக தடம்பதித்த நூருத்தீன் முஹம்மத் அஜ்வர் என்ற மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 31.10.2014 வெள்ளிகிழமை இஷா தொழுகையின் பின் புதிய காத்தான்குடி 01 பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுக்கு முதன்மை அதிதியாக சங்கைக்குரிய ஷெய்குல்பலாஹ் மௌலானா,மௌலவி,அல்ஹாஜ் MA.அப்துழ்ழாஹ் (ரஹ்மானி) கலந்து சிறப்பிக்க உள்ளதுடன் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் MHM. யஹ்யா (பலாஹி,பின்னூரி) (மொழிபெயர்ப்பாளர், மர்க்கஸ் தஃவா சென்டர், கொழும்பு) அவர்களின் விஷேட உரையும் இடம்பெற உள்ளது.
Published by


Leave a comment