ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து மரணத்தைத் தழுவிய 6 பெண் குழந்தைகளின் தந்தையான சவுதி வாலிபர்!
– MJ
டமஸ்கஸ்: சிரியா-துருக்கி எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் கொபேன் பகுதியில் குர்திஸ் போராளிகளுக்கும் ஐ.எஸ். இயக்கத்திற்கும் இடையில் இடம்பெற்றுவரும் உக்கிர மோதலில் 42 வயதையுடைய அல் ஸஹ்ரானி எனும் சவுதிப்பிரஜை மரணத்தைத் தழுவியுள்ளார்.
சவுதி அரேபியாவின் அல் Bபஹா பிரதேசத்தில் வசித்துவந்த அல் ஸஹ்றானி, றியாத்தில் இருக்கும் மன்னர் பைஸல் சிறப்பு மருத்துவமனையில் பனியாற்றியவர். மேலும் 6 பெண் குழந்தைகளுக்கு தந்தையுமாவார். தனது சிறந்த தொழிலையும், அன்பு மனைவி மற்றும் பாசமுள்ள 6 பெண் குழந்தைகளையும் விட்டு, 18 மாதங்களுக்கு முன்னர் சிரியாவுக்குச் சென்றிருந்தார்.MJ
அதன்பின்னர் ஐ.எஸ் போராட்ட இயக்கத்தில் இணைந்து சிரியாவில் போராடிவந்த ஸஹ்ரானி, கொபேன் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்டுள்ளார். இவரது பெயர் இப்றாஹிம் அல் ஸஸ்ராவி எனவும் அழைக்கப்பட்டதாகவும் பின்னர் தெரியவந்தது.
அல் ஸஹ்ரானி போரில் கொல்லப்பட்ட செய்தி அவரது குடும்பத்தினருக்கும் எத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இவரது ஆளடையாளத்தை பிரிதொரு ஐ.எஸ். இயக்க உறுப்பினர் உறுதிப்படுத்தியிருந்ததாகவும் தற்பொழுது தெரியவந்துள்ளது.
Leave a comment