காத்தான்குடி: சிரேஷ்ட ஊடகவியலாளரும் தேசிய சாஹித்ய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கான் எழுதிய முறிந்த சிறகும் என் வானமும் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று 31-10-2014 வெள்ளிக்கிழமை காத்தான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரி மண்டபத்தில் மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்குமகாண பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் ,மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ,கிழக்கு பல்கலைக் கழக துணைவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா, இறைவரி திணைக்கள ஆணையாளர் எஸ்.கணேசராஜா ஆகியோர் முன்னிலை அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
Published by

Leave a comment