Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் மக்கள் முற்கூட்டியே முடிவெடுத்து விட்ட சரித்திரம் இம்முறை அமைந்துள்ளது”

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: ‘முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை மதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நான், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் மக்கள் முற்கூட்டியே முடிவெடுத்து விட்ட சரித்திரம் இம்முறை அமைந்துள்ளது.’ இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் உணர்ச்சி பீறிட்டுக் கூறினார்.

  • கிழக்கு மாகாண சபை வரவு செலவுக் கூட்டம் ஒத்திவைப்பு

    திருகோணமலை: கிழக்கு மாகாண சபை வரவு – செலவு திட்ட விவாதத்திற்காக இன்று மீண்டும் கூடிய போது தற்போது சபையில் உருவாகியுள்ள நெருக்கடி நிலை காரணமாக சபை அமர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 12ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

  • புதிய செய்தி இணையதளம் ஆரம்பம்

    காத்தான்குடி: kattankudyinfo.lk எனும் புதிய செய்தி இணையதளமொன்று இன்று தொடக்கம் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையதளத்திற்கும் காத்தான்குடி இன்போ என்ற செய்தி இணையதளம் நடாத்திய பிரதான நிருவாகிகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதை மிகத்தெளிவாக குறிப்பிட விரும்புகின்றோம்.

  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண உறுப்பினர்களை உடனடியாக கொழும்புக்கு வருமாரு அழைப்பு!

    கொழும்பு: ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள கிழக்கு மாகாண சபையின் பங்காளிக் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் உடனடியாக கொழும்பு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர் என மாகாண சபை உறுப்பினரொருவர் தெரிவித்தார். இந்த அழைப்பு கட்சித் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் விடுக்கப்பட்டுள்ளது.

  • “களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் ஆதரவு மஹிந்தவுக்கே: வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க கோட்டபாயவை அழைப்பேன்”

    சீனன் கோட்டை: களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் முழுமையான ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே என்ற செய்தியை சீனன் கோட்டையில் நடைபெற்ற பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ- முஸ்லிம் மக்களுடனான மாபெரும் சந்திப்பு நிரூபித்துள்ளதாக பேருவளை நகர பிதாவும் பாதுகாப்புச் செயலாளரின் களுத்துறை மாவட்ட முஸ்லிம் இணைப்பாளருமான அல்-ஹாஜ் மில்பர் கபூர் தெரிவித்தார்.

  • ஜனாதிபதி உட்பட ஐவர் கட்டுப்பணம் செலுத்தினர்

    கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பில் நேற்று தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. ஐ.ம.சு.மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த் காலை 10.45 அளவில் கட்டுப்பணம் செலுத்தியதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்தார்.

  • முஹமட், மரியம் ஆகிய பெயர்களே பிரித்தானியாவில் பிரபலம்!

    லண்டன்: பிரித்தானியாவில் குழந்தைகளின் பெயர் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், இந்த ஆண்டில் ‘முஹமட்’ என்ற பெயரே ஆண் பிள்ளைகளுக்கான பெயர்களில் மிகவும் பிரசித்தம் பெற்றுள்ளது. ‘ஒலிவர்’ என்ற பெயர் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பொதுவாக, அராபிய பெயர்களில் பெரும் அதிகரிப்பு காணப்படுகின்றது.

  • மகிந்தவுக்கு எதிரான பொது எதிரணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    கொழும்பு: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் அடங்கலாக 36 அமைப்புகளின் பிரதிநிதிகள் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். ‘நீதியான ஜனநாயக மற்றும் மக்கள் நலன் பேணுகின்ற ஆட்சிக்கான’ பொது மக்கள் நிகழ்ச்சித் திட்டம் உன்ற பெயரில் ஒன்றிணைந்துள்ள கட்சிகளும் அமைப்புகளுமே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

  • பொறியியலாளர் அப்துர் ரஹ்மானுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை பற்றி பேச அருகதை கிடையாது – நகர சபை உறுப்பினர் சியாட்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: முஸ்லிம்களை பற்றி கணக்கெடுக்கமால் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்திய பொறியியலாளர் அப்துர் ரஹ்மானுக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதயிமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை பற்றி பேச அருகதை கிடையாது என காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சியாட் ஜே.பி தெரிவித்தார்.

  • சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் அபிவிருத்திப் பணிகள் கையளிப்பு

    ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட நுளைவாயில் மற்றும் சுற்றுமதில் என்பன திறந்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

  • பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் NFGGயின் உத்தியோகபூர்வ நிகழ்வு நாளை கொழும்பில்

    NFGG ஊடகப்பிரிவு கொழும்பு: ஆட்சிமுறை மாற்றம் ஒன்றிற்கான வேலைத்திட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது.

  • பொது எதிரணியின் ஆழுருவில் NFGGயும் கைச்சாத்திட்டது

    NFGG ஊடகப்பிரிவு கொழும்பு: கொழும்பு விஹாரமகா தேவி திறந்தவெளி அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில் NFGGயின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் MR. நஜா முஹம்மத் அவர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.

←Previous Page
1 … 607 608 609 610 611 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar