பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் NFGGயின் உத்தியோகபூர்வ நிகழ்வு நாளை கொழும்பில்

maithiripaala unpNFGG ஊடகப்பிரிவு

கொழும்பு: ஆட்சிமுறை மாற்றம் ஒன்றிற்கான வேலைத்திட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் உத்தியோக பூர்வ நிகழ்வு நாளை 02.12.2014 செவ்வாய்க்கிழமை, கொழும்பு புதிய நகர மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஸ்தாபககர் மாதுளுவாவே சோபித தேரர், ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், அர்ஜுன ரணதுங்க ஆகியோருக்கு முன்னிலையில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அழைப்பு விடுக்கின்றது.

Published by

Leave a comment