ஜனாதிபதி உட்பட ஐவர் கட்டுப்பணம் செலுத்தினர்

electionகொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பில் நேற்று தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. ஐ.ம.சு.மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த் காலை 10.45 அளவில் கட்டுப்பணம் செலுத்தியதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை ஐவர் கட்டுப்பணம் செலுத்தியுள் ளதாக அவர் கூறினார். ஏற்கனவே, ஜனசெத்த முன்னணி சார்பில் வண.பத்தரமுல்ல சீலரத்ன தேரர், ஒக்கொம வெசியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு சார்பில் எம்.பி. பெமினிமுல்ல, சோசலிச சமத்துவக் கட்சி சார்பில் பானி விஜேய சிரிவர்தன, ஐக்கிய சோசலிசக் கட்சி சார்பில் சிரிதுங்க ஜெயசூரிய ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

ஐ.ம.சு.மு. வேட்பாளர் சார்பில் கட்டுப்பணம் செலுத்தும் நிகழ்வில் நிலங்கா சுதந்திரக்கட்சி செயலாளர் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன, சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி, பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

election

இங்கு கருத்துத் தெரிவித்த சு.க. செயலாளர் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா ஜனாதிபதியின் வெற்றிக்காக சகல தேர்தல் எற்பாடுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனாதிபதி தேர்தல்களை விட இம்முறை தேர்தலில் ஐ.ம.சு.மு. வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூடுதல் வாக்குகளினால் வெற்றியீட்டுவார். ஜனாதிபதியின் வெற்றி உறுதியாகிவிட்டது என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த மக்கள் ஐக்கிய முன்னணி தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் 14 கட்சிகள் இணைந்து செயற்படுகின்றன. எதிர்காலத்தில் மேலும் பல கட்சிகள் அமைப்புகள் ஐ.ம.சு.மு.வுடன் கைகோர்க்க தயாராக உள்ளன. ஐ.ம.சு.மு. வேட்பாளரின் வெற்றிக்காக மக்கள் ஒன்றுபட்டுள்ளனர் என்றார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணங்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரையே ஏற்கப்பட உள்ளதோடு 8 ஆம் திகதி வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட இருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 2 ஆவது பதவிக்காலத்தின் 4 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதம் 20 ஆம் திகதி வெளியிட்டார். இது தொடர்பான அறிவிப்பில் ஜனாதிபதி கையொப்ப மிட்டதையடுத்து விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டது.

இதன்படி, வேட்புமனு ஏற்கும் திகதியையும் தேர்தல் தினத்தையும் தேர்தல் ஆணையாளர் அறிவித்தார். இதன்படி, தபால் மூல வாக்களிப்பு டிசம்பர் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெற இருக்கிறது.

Published by

Leave a comment