காத்தான்குடி: kattankudyinfo.lk எனும் புதிய செய்தி இணையதளமொன்று இன்று தொடக்கம் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையதளத்திற்கும் காத்தான்குடி இன்போ என்ற செய்தி இணையதளம் நடாத்திய பிரதான நிருவாகிகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதை மிகத்தெளிவாக குறிப்பிட விரும்புகின்றோம்.
இந்த செய்தி இணையதளமானது அனைத்து தரப்புச் செய்திகளையும் பிரசுரிக்க எதிர்ப்பார்த்துள்ளதுடன் ஊடக ஒழுக்கம் மற்றும் ஊடக நாகரீகம், ஊடக சமத்துவம் நடு நிலைமை என்ற ஊடகக் கொள்கையின் அடிப்படையிலும் இலங்கையின் இறைமை மற்றும் தேசிய பாதுகாப்பு இன நல்லினக்கம் சமூக ஒற்றுமை போன்ற வற்றை பாதுகாத்துக் கொண்டு செய்திகளை நடு நிலையாக வெளியிடவுள்ளது.
இதில் வரும் கட்டுரைகள் மற்றும் செய்திகள் செய்தி விமர்சனங்கள் தொடர்பில் விமர்சனங்கள் இருப்பின் தமது கருத்துக்களை நாகரீகமான முறையில் ஊடக வரையறைக்குள் நின்று எழுத்து மூலம் அனுப்பினால் அதை பிரசுரிக்க நாம் ஆயத்தமாக இருக்கின்றோம்.
எனவே அனைத்துச் செய்திகள் மற்றும் பிராந்திய செய்திகள், கட்டுரைகள் விமர்சனங்கள் அரசியல் நிலவரங்கள் போன்ற வற்றை அனைவரும் இதற்கு தாராளமாக எழுத முடியும்.
kattankudyinfo.lk@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு செய்திகள் மற்றும் பிராந்திய செய்திகள், கட்டுரைகள் விமர்சனங்கள், அரசியல் நிலவரங்கள் ஆக்கங்களை பிரதேசங்கிளல் நடைபெறும் நிகழ்வுகள் என்பவற்றை அனுப்பி வைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா J P . (ஊடகவியலாளர்)
நிறைவேற்றுப்பணிப்பாளர்
Published by

Leave a comment