முஹமட், மரியம் ஆகிய பெயர்களே பிரித்தானியாவில் பிரபலம்!

muslim womenலண்டன்: பிரித்தானியாவில் குழந்தைகளின் பெயர் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், இந்த ஆண்டில் ‘முஹமட்’ என்ற பெயரே ஆண் பிள்ளைகளுக்கான பெயர்களில் மிகவும் பிரசித்தம் பெற்றுள்ளது. ‘ஒலிவர்’ என்ற பெயர் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பொதுவாக, அராபிய பெயர்களில் பெரும் அதிகரிப்பு காணப்படுகின்றது.

முதல் 100 பெண் பிள்ளைகளின் பெயர்களில் குறிப்பாக, ‘மர்யம்’ என்ற பெயர் வேகமாக அதிகரித்துவருகின்றது. புது வருகையான ‘நூர்’என்ற பெயரும் பிரபலமடைந்துவருகின்றது. மேலும் ஒமர், அலி, இப்ராஹிம் ஆகிய பெயர்களும் முதற்தடவையாக முதல் 100 ஆண் குழந்தைகளின் பெயர்களில் இடம்பிடித்துள்ளன.

ஜோர்ஜ், வில்லியம், ஹரி உள்ளிட்ட அரச குடும்ப பெயர்களின் பிரபலம் குன்றியுள்ளதாகவும் ஆய்வில் தெரியவருகிறது.

muslim women

Published by

Leave a comment