பொலன்னறுவை: அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு மஹிந்த ராஜபக்சவின் சலுகைகள் அறிவிக்கப்பட்டாலும் அவர்களில் பலர் எதிர்க்கட்சி பொதுவேட்பாளருக்கு வெளிப்படையாகவே ஆதரவை வெளியிட்டு வருகின்றனர். இலங்கையில் தற்போது ஜனாதிபதி தேர்தலை குறி வைத்து அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த மோட்டார் சைக்கிள்கள் கிடைக்கப்பெற்றவர்கள் மஹிந்த ராஜபக்சவுக்கே ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாக அமைந்துள்ளது. எனினும் அண்மையில் பொலன்னறுவையில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற கூட்டத்துக்கு முன்னர் ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது ஊர்வலகத்தில் பல மோட்டார் சைக்கிளோட்டிகளும் பங்கேற்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் ஊர்வலத்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by
![motor_bike_002[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/10/motor_bike_0021.jpg?w=150&h=90)
Leave a comment