-நமது நிருபர்-
மஞ்சந்தொடுவாய் ஹிக்மா கல்வி நிறுவனத்தின் பாலர் கலை நிகழ்வு மஞ்சந்தொடுவாய் ஹிழுரியா ஜூம்ஆ பள்ளிவாயல் மதரசா மண்டபத்தினில் திட்ட மிட்டபடி நிறுவனத்தின் தலைவர் ஜனாப் முகம்மது ஹக்கீம் தலைமையில் (07.12.2014 ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது பிரதம அதிதியாக BCAS கல்வி நிறுவனத்தில் பணிப்பாளர், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கலந்து கொண்டார்.
மேற்படி நிகழ்வினில் காத்தான்குடி நகர சபையின் எதிர்கட்சி உறுப்பினர் ஜனாப் எஸ்.எச்.எம் பிர்தௌஸ்(ஆசிரியர்) மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தின் அதிபர் MLM கான்,கிராம சேவை உத்தியோகஸ்தா்,பள்ளிவாயல் தலைவர் ஜனாப் முகம்மது அபுல்ஹசன் மற்றும் அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்…..
பாலர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம் பெற்றதுடன் பாலர்களுக்கான சாண்றிதழ்கள்,பரிசில்கள் நிகழ்வின் பிரதம அதிதி பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாடசாலை மற்றும் மாணவர்களின் மிகவும் சிறப்பான செயல்பாட்டினை அவதானித்த கௌரவ அதிதி பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தனது சொந்த நிதியாக 25000/= உடன் வழங்கி வைத்தார் என்பதும் விசேட அம்சமாகும்.
Published by







Leave a comment