பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் சன்மார்க்க ஒன்று கூடல்

abdul hameed– பழுலுல்லாஹ் பர்ஹான்

பாலமுனை: மட்டக்களப்பு –பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் சன்மார்க்க ஒன்று கூடல் 06-12-2014 நேற்று சனிக்கிழமை பாலமுனை அம்மார் ஜூம்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது. பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் தலைவர் அமான் தலைமையில் இடம்பெற்ற இவ் சன்மார்க்க ஒன்று கூடலில் வாய்மையுள்ள முஸ்லிம் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.டி.எம்.அஸ்ஹர் மின்ஹாஜியும்,நவீன பொருளீட்டலில் ஹலாலும் ஹராமும் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எச்.எம்.அஸ்பர் பலாஹியும்,

அல்லாஹ்வின் பாதையில் முன்மாதிரி மிக்க ஸஹாபா சமூகம் எனும் தலைப்பில் ஏ.ஜே.எம்.ஷாபி சஹ்தியும்,இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய புதிய கொள்கைகளும் கோட்பாடுகளும் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.நஷ்மல் (பலாஹியும்,வாழ்வின் அர்த்தம் அறியாத மனித சமூகம் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக் மதனியும்,நெருக்கடிக்குள்ளான மனித உள்ளத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு எனும் தலைப்பில் அஷ்ஷெய்க எஸ்.எம்.அப்துல் ஹமீட் ஷரயீ ஆகியோர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள்.

நேற்று காலை 9 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை இடம்பெற்ற இவ் விஷேட சன்மார்க்க ஒன்று கூடலில் பெரும் திரளான ஆண்கள்,பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

abdul hameed

palamunai

Published by

Leave a comment