ஆரையம்பதி வாகன விபத்தில் மட்டக்களப்பு தாதியர் கல்லூரி இறுதியாண்டு மாணவி ஸ்தலத்திலேயே பலி

arayampathi– பழுலல்லாஹ் பர்ஹான்

ஆரையம்பதி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு–கல்முனை ஆரையம்பதி பிரதான நெடுஞ்சாலையில் 06-12-2014 நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு தாதியர் கல்லூரி இறுதியாண்டு மாணவி கோணேசலிங்கம் விஜிதா வயது 29 என்பவர் ஸ்தலத்திலேயே பலியாகியதுடன் ஒருவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் தெரிவித்தனர்.

கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு டிப்போவுக்கும் சொந்தமான பஸ்ஸூம் ஆரையம்பதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதியேதிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

arayampathi

மேற்படி இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மட்டக்களப்பு தாதியர் கல்லூரி மாணவியே மரமடைந்ததுள்ளதுடன் அவரை ஏற்றிவந்த அவரின் வருங்கால கனவர் காயமடைந்துள்ளார்.

இந்நிலையில் மேற்படி விபத்தில் தொடர்புடைய பஸ் வண்டியை காத்தான்குடி பொலிசார் தடுத்து வைத்துள்ளதுடன் அப் பஸ் வண்டியின் சாரதியையும் கைது செய்துள்ளர்.

arayampathi (2)

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்துப் பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருவதாக அப் பிரிவு பொறுப்பதிகாரி துஷார ஜெயலால் தெரிவித்தார்.

இவ் விபத்தில் பழியானவர் மட்டக்களப்பு தாதியர் கல்லூரி மாணவி என்பதால் மட்டக்களப்பு தாதியர் கல்லூரியில் இன்று 7 ஞாயிற்றுக்கிழமை வெள்ளை நிற கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதோடு கண்ணீர் அஞ்சலி தொடர்பான பதாதையும் தொங்கவிடப்பட்டுள்ளது.

bus

arayampathi (4)

Published by

Leave a comment