– செட்டிக்குளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
செட்டிக்குளம்: வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவில் முஸ்லிம்களின் பயன்பாட்டிற்கென ஒதுக்கப்பட்ட 12 ஏக்கர் காணி தொடர்பில் இரானுவத்தினருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் உடன்பாடு ஒன்று காணப்படுவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டுவருவதாக செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் சருக் தெரிவித்துள்ளார்.
நேற்றும்.இன்றும் இந்த பிரதேச மக்கள் தமது காணியினை கோறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதனையடுத்து இப்பிரதேசத்துக்கு வருகைத்தந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் இருதரப்புடனும் பேசியதுடன், இன்னும் இருவாரங்களுக்குள் இதற்கான தீர்வை பெற்றுத்தர உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
அதே வேளை இந்த காணியினை பெற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அதீத அக்கறை காட்டியதாகவும், வடமாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அமைச்சர் தொடர்பில் பிழையான கருத்துக்களை சமூகத்துக்கு முன் வைப்பதை தாம் வண்மையாக கண்டிப்பதாகவும் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் சரூக் தெரிவித்தார்.
அரசியல் சூழ் நிலையினை பயன்படுத்தி அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் சேறு பூசும் நடவடிக்கையினை கட்நத காலங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்ததாகவும்இதற்போமத அந்த கொன்தராத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் முன்னெடுத்து செல்வதாக சந்தேகம் வெளியிட்டுள்ள செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர் இது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் கூறினார்.
ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற இடத்துக்கு வருகைத்தந்த வடமாகாண ஆளுநரின் ஆணையாளர் ஷாஹிப் மொஹதிடீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மத் ஆகியோர் இரானுவ உயர் அதிகாரிகளுடன் பேசி இப்பிரச்சினை்கு சுமூகமான தீர்வை வழங்கும் வகையில் செயற்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
Published by



Leave a comment