காத்தான்குடி: ‘செழிப்பான இல்லம் ‘எனும் தொனிப்பொருளில் திவிநெகும உதவிபெறும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்கான வீட்டு மானிய உதவிகளை வழங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைவாக காத்தான்குடி பிரதேசத்தில் 1 கோடி 3 இலட்சம் ரூபாய் நிதியில் ஒரு குடும்பத்திற்கு 2500 ரூபாய் வீதம் சுமார் 5300 திவிநெகும பயனாளிகளுக்கும் வீட்டு மானிய உதவி வழங்கும் திட்டத்தில் சுமார் 500 பேருக்கு வீட்டு மானிய உதவி வழங்கும் நிகழ்வு 10-12-2014 இன்று புதன்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்கத்தின் காத்தான்குடி பிரதேச திவிநெகும பொறுப்பாளர் ஏ.எம்.சுல்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு மேற்படி 500 பேருக்கு வீட்டு மானிய உதவித் தொகை 2500 ரூபாவை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின், வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.எச்.எம். முஸம்மில், காத்தான்குடி பிரதேச திவிநெகும வங்கி முகாமையாளர் ஏ.எல்.செட். பஹ்மி உட்பட திவிநெகும உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
Published by

Leave a comment