சி.ஐ.ஏ. சித்திரவதை அறிக்கை வெளியாவதையொட்டி உலகெங்கும் அமெ. வளாகங்களின் பாதுகாப்பு அதிகரிப்பு!!

america usaவாஷிங்டன்: அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. வின் கொடூரமான புலன்விசாரணை செயற்பாடுகள் குறித்த அறிக்கை வெளியாகவுள்ள நிலையில் உலகெங்கும் உள்ள அமெரிக்க வளாகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாரிய அச்சுறுத்தல் இருப்பதால் தூதரகங்கள் மற்றும் ஏனைய தலங்களில் முன்னெச்சரிக்கை செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சி.ஐ.ஏ. தொடர்பான 480 பக்கங்கள் கொண்ட செனட் சபை அறிக்கை அமெரிக்க நேரப்படி நேற்று வெளியாகவிருந்தது.

இதில் செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் அல் கய்தாவுக்கு எதிரான சி.ஐ.ஏ. வின் நடவடிக்கைகள் குறித்த விபரம் அம்பலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சி.ஐ.ஏ. தனது புலன் விசாரணைகளில் மிக முக்கிய மான சந்தேக நபர்களிடம் சர்ச்சைக்குரிய முறைகளை கையாள்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த மோசமான விசாரணை முறை மூலம் சரியான முடிவை பெற தவறி இருப்பதாக செனட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப் பதாக தெரிகிறது. எனினும் இந்த அறிக்கையை வெளியிடுவது குறித்து அமெரிக்க அரசுடன் கருத்து முரண்பாடு நிலவியதால் இதனை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

எனினும் செனட் புலனாய்வுக் குழு தயாரித்த 6,200 பக்க முழு அறிக்கை தொடர்ந்து இரகசிய மாக வைக்கப்பட்டுள்ளது. இதில் 480 பக்க சுருக்கமான அறிக்கை ஜனநாயக கட்சி குழுவினாலேயே வெளியிடப்படவுள்ளது.

பராக் ஒபாமா 2009 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பொறுப் பேற்றதை அடுத்து சி.ஐ.ஏ. வின் புலன்விசாரணை முறையை நிறுத் தினார். அல் கொய்தா கைதிகள் கொ^ரமான சித்திரவதைக்கு உள்ளாவதை தெரிந்தே அவர் அந்த நடவடிக்கையை நிறுத்தினார். முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் காலத்தில் அல் கய்தாவுக்கு எதிரான சி.ஐ.ஏ. நடவடிக்கையில் பல சந்தேக நபர்களும் கடத்தப்பட்டும், தடுத்து வைக்கப் பட்டும் மற்றும் புலன் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றனர். இவ்வாறான 100க்கும் அதிகமான சந்தேக நபர்கள் அமெரிக்காவுக்கு வெளியில் இரகசிய மான இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சந்தேக நபர்கள் நீரில் மூழ்கடிப்பது, அறைவது, இழிவுபடுத்துவது, குளிரில் வைப்பது, தூங்க விடாமல் வைப்பது போன்ற துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

‘வெளியிடப்படவிருக்கும் அறிக்கை காரணமாக உலகெங்குமுள்ள அமெரிக்க வளாகங்கள் மற்றும் தனிநபர் கள் பாரிய அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க வாய்ப்பு இருக்கிறது” என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜோஷ் ஏர்னஸ் திங்கட்கிழமை குறிப்பிட்டார். அமெரிக்க தலங்களை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Published by

Leave a comment