கிரான்: இளைஞர்களுக்கு நல் வழிகாட்டுதல்களை வழங்குபவர்களாக இளைஞர் சேவைகள் அதிகாரிகள் திகழ்கின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவர் எம்.ரீ.எம். பாரிஸ் தெரிவித்தார்.
எயிட்ஸ் நோய் ஒழிப்பு தொடர்பாக விழிப்பூட்டும் செயலமர்வுகளின் இறுதி நிகழ்வு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் இளம் சுடர் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் த. கிசோத் தலைமையில் முறக்கொட்டான்சேனை மாதர் கிராம அபிவிருத்தி சங்கக் கட்டிடத்தில் இடம்பெற்றது. அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரவித்தார்.
அங்கு அவர் இளைஞர்,யுவதிகள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இலங்கை தாய் திருநாட்டினை பொறுத்தவரை மிகச் சிறப்பாக இயங்கும் மாபெரும் அரசாங்க மன்றமாகும்.
அதிலும் விஷேடமாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிராந்திய நிறுவனமானது குறைந்தளவான வளங்களை கொண்டுள்ளதுடன் நேர்மையும், தியாகமும், நிறைந்த ஒரு உதவிப்பணிப்பாளரையும், தன்பிள்ளைகளாக எம்மை கருதி எமது முன்னேற்றத்தினையும் எமது எதிர்காலத்தினையும் கருத்தில் கொண்டு எச் சந்தர்பத்திலும் எம்மோடு இணைந்து எமது ஆளுமைகளை வளத்திட துனையாய் நின்று உழைக்கும் இளைஞர் சேவைகள் அதிகாரிகளையும் கொண்ட மாவட்டமாகும்.
அதிகளவான தமிழ் மொழி பேசும் மக்களை கொண்ட எமது மாவட்டத்தில் தமிழ்,முஸ்லிம் என்ற வேறு பாடுகளுடன் நாம் வாழ்தாலும் ‘நாங்கள் சமயத்தால் மாத்திரமே இந்து, முஸ்லிம் என்று பிரிந்து காணப்படுகின்றோம்.
ஆனால் நாம் பேசும் மொழியால் நான் தமிழன் என்று பெருமையாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.
கடந்த 30 வருட கால யுத்தம் எம்மை அன்னண், தம்பியாக, மாமன், மச்சானாக வாழ விடாமல் பிரித்து வைத்திருத்தது. இறைவனின் உதவியால் நாம் இன்று ஒன்றாய் கூடி வாழும் சந்தர்பம் எமக்கு கிடைந்துள்ளது.
எது எவ்வாறாயினும் இனம், மதம் வேறு பாடுகளுக்கு அப்பால் விட்டுக்கொடுப்பு, பொறுமை, அன்பு, பகிர்வு என்ற உயர் எண்ணங்களுடன் ‘இலங்கை இளைஞர்கள்’ என்ற அந்த நாமத்துடன் நாம் அனைவரும் ஒன்றினைத்துள்ளோம்.
இச் சந்தர்பங்களையும் சிறப்பான வழிகாட்டுதல்களையும் எமக்கு வழங்கும் நபர்களாக எமது இளைஞர் சேவைகள் அதிகாரிகள் திகழ்கின்றனர்.
அவர்களுடன் கண்னியத்தோடு நடந்து கொள்ள வேன்டிய பொறுப்பும் கடமையும் எமக்கு உண்டு ஏனென்றால் இளைஞர்களுடன் ஒன்றினைந்து பணி புரிவது என்பது மிக கடினமான ஒரு விடயமாகும்.
பல தரப்பட்ட மாற்று கருத்துக்களுடன் பல எண்ணங்களுடன் பயனிக்கும் எம்மை அன்பால் விலங்கிட்டு பாசத்தால் வேலியிட்டு எமது எதிர்கால வாழ்கைக்கு வழியமைத்து கொடுப்பவர்கள் எமது இளைஞர் சேவைகள் அதிகாரிகள் என்பதனை எந்த ஒரு இளைஞசனாலும் மறுக்க முடியாது.
எம்மை தலைவராகவும், செயலாளராகவும், அமைப்பாளராகவும், பொருலாளராகவும் ஆக்கி அப் பொறுப்பினை ஏற்று பக்குவத்துடன் எம்மை செயல்பட வைப்பவர்கள் அவர்களே.
எனவேதான் என்றும் நன்றி உணர்வுகளுடன் நாம் எமது இளைஞர் சேவை அதிகாரிகளை அனுக வேன்டும் அவர்கள் எமக்காக கொண்டு வரும் எம் நல திட்டங்களை நாம் பெருமனதுடன் ஏற்று அதனை எமது மாவட்ட இளைஞர்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்குமாறு மாவட்ட இளைஞர் சம்மோளனத்தின் உப தலைவர் என்ற வகையில் அன்புடன் வேன்டிக்கொள்கின்றேன் என்றார் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவர் எம்.ரீ.எம்.பாரிஸ்.
Published by

Leave a comment