பாதுகாப்பு செயலருடன் முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு

300Slmc_1_1[1]கொழும்பு: கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினர். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையொன்றின் போது சகல பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு முன்வைக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சில், திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியிலிருந்து 5.00 மணிவரை நடைபெற்ற இச் சந்திப்பில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நிலவும் காணி பிரச்சினை, மீன்பிடி மற்றும் பள்ளிவாசல் சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டுள்ளது.

திருகோணமலை புல்மோட்டைப் பிரதேசத்தில் 500 ஏக்கர்களைக் கொண்ட அரிசிமலை காணி பிரச்சினை பொன்மலைக்குடா பிரதேசத்தில் படையினரால் கைப்பற்றப்பட்டிருக்கும் காணிகள் மற்றும் சுனாமி வீடுகளை உடனடியாக மீட்டுக் கொடுக்கும்படி கடற்படைத் தளபதிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்படாதுள்ள நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஆலிம்சேனை காணிப் பிரச்சினை, சம்மாந்துறை வளத்தாப்பிட்டி விவசாய நிலம் தொடர்பான பிரச்சினை என்பவற்றுக்கும் ஏனைய சில பிரதேசங்களில் முஸ்லிம்கள் எதிர்நொக்கும் நிர்வாக பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் முந்திய தினம் இராணுவத்தினரால் ஆண்டியா புளியற்குளத்தில் வேலியடித்து வேறாக்கப்பட்ட காணியை பாடசாலைக்கு வழங்கிவிடுமாறு உத்தரவு பிறப்பிக் கப்பட்டது.

Published by

One response to “பாதுகாப்பு செயலருடன் முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு”

  1. இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதிகளாகப் பார்க்கப்படும் ஒரு கட்சி, அதுவும் ஆட்சியில் அமைச்சர்களாகவும் வேறு உள்ளவர்கள், முஸ்லிம்களின் பிரச்சினையை வென்றெடுக்க, அமைச்சர்களின் கீழ‌் வேலை பார்க்கும் ஒரு செயலாளருடன் பேச்சவார்ததை நடத்துகிறார்கள் என்பதை நினைக்கும் போது, எந்த அளவு இழுக்கை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதையம், தமது அந்தஸ்தையும் இழந்து, முஸ்லிம்களுடைய மரியாதையையும் அடகு வைத்துள்ள கோமாளிகளாகி உள்ளனர் என்பதை அவதானிக்க முடிகின்றது.

    அடுத்து எவ்வாறு ஒரு நாட்டைவிட்டு ஓடிச் சென்று, அண்ணன் நாட்டின் அதிபராகியதும் திரும்பி வந்த, பாதுகாப்பமைச்சின் செயராளராகியுள்ள ஒரு முன்னாள் இராணுவ உத்தியோகத்தரின் கையில், இந்த நாட்டின் தலைவிதி சிக்கி சின்னாபின்னம் ஆகிக்கொண்டிருக்கின்றது என்பது மக்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியது.

Leave a comment