“அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சிஐஏ கைகொண்ட சர்ச்சைக்குரிய விசாரணை முறைகளில் தோல்விகளே கிடைத்தன”

ciaவாஷிங்டன்: அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சிஐஏ கைகொண்ட சர்ச்சைக்குரிய விசாரணை முறைகளை, கொடுமையானது என்றும் திறனற்றது என்றும் வர்ணித்துள்ள அமெரிக்க செனட் அவை அறிக்கை, இம்முறைகளைக் கையாண்டதற்காக சி ஐ ஏ வை கடுமையாக விமர்சித்துள்ளது. சில நேரங்களில் தடுத்து வைக்கப்பட்டோர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை முறையானது சித்ரவதையை ஒத்திருந்ததாக செனட் அவையின் புலனாய்வுக் குழுவின் தலைவர் டையான் பெயின்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டத் தாக்குதல்களுக்குப் பிறகு அமல்படுத்தப்பட்ட இந்த விசாரணை முறைகள் காரணமாக ஒரு தடவை கூட, தீவிரவாதிகளிடம் இருந்து வரக்கூடிய உடனடி அபாயங்கள் தொடர்பில், உருப்படியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

cia

சிஐஏ விசாரணை முறைகளின்படி, தீவிரவாத சந்தேக நபர்கள் 180 மணிநேரம் தொடர்ந்து விழித்திருக்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர். கைதிகள் அவமானப்படுத்தப்பட்டனர், அடிக்கப்பட்டனர். வலிதரக்கூடிய வகையில் உட்காரும்படி பணிக்கப்பட்டனர். இந்த திட்டத்தை சிஐஏ முறையாக செயல்படுத்தவில்லை என்றும் இது தொடர்பாக மக்களுக்கு அது தவறான விவரங்களைத் தந்ததாகவும் செனட் உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Published by

Leave a comment