ஹிரு­ணிகா வீட்டின் மீது கழிவு எண்ணெய் தாக்குதல்!

Hirunika-300x225கொழும்பு: ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் மேல் மாகாண சபை உறுப்­பி­னரும் மறைந்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினருமான பாரத லக்ஷ்மன் பிரே­மச்­சந்­திரவின் புதல்­வி­யு­மான ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திரவின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களால், கழிவு எண்ணெய் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு கட் அவுட்டுகளும் கிழிக்கப்பட்டுள்ளன.

வெள்ளை வேன் மற்றும் டிப்பன்டர் வாகனங்களில் வந்த நபர்களே இன்று அதிகாலை மேற்படி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனக்கு பாரிய அநீதி இழைக்­கப்­பட்­டுள்ளது. இதனால் சுதந்­திரக் கட்­சியில் இருந்­து­கொண்டே  பொதுவேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக நேற்று முன்தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment