காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலக கலாச்சார பேரவையால் பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் அவர்கள் தலைமையில் அண்மையில் நடாத்தப்பட்ட பிரதேச கலாச்சார விழா 2014ல் கவிஞர் இல்மி அஹமட் லெவ்வை அவர்கள் கவிதைத் துறைக்கான விருதும் ‘கவிக்கோன் ‘ எனும் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சிறப்பித்தார். இவ்விழாவில் காத்தன்குடியின் சிரேஸ்ட கவிஞர் ரீ.எல். ஜவ்பர்கான் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்
புதிய காத்தான்குடியை சேர்ந்த கவிஞர் இல்மி அஹமட் லெவ்வை அவர்கள் முன்னாள் பட்டினாட்சி மன்ற தவிசாளர் எம்.ஐ.எம். காசிம் ஹாஜியார் அவர்களின் பேரனும், 3ம் வாட் எம். எல் அஹமது லெவ்வையின் மகனுமான இவர் 1987 களிலிருந்து இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகிறார்.
வேதனையில் பாடுவேன் என்ற மரபுக்கவிதை தினகரனில் 1987 ஆண்டு பிரசுரமாகி இருந்தது. தொடர்ந்து தினகரன்வாரமஞ்சரி, சிந்தாமணி, நவமணி, கிழக்குமண், மற்றும் தற்கால பிரசித்தமான இணையத்தளங்களிலும் இவரினது கவிதைகள் பிரசுரமாகியுள்ளது.
இலக்கிய மேடைகளில் இவரால் பாடப்பட்டு வரும் கவிதைகள் பாராட்டுக்களை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கவிதை போட்டிகளில் பங்குபற்றி பரிசில்கள் பெற்றுள்ள இவருக்கு பொற்கிளியும் கிடைக்கப்பெற்றள்ளது.
மலேசியாவில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு, இந்திய காயல்பட்டண இலக்கிய மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார்.
நெருப்பு நிழல் எனும் கவிதைத் தொகுதி விரைவில் வெளிவரவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவற்றுக்கப்பால் நீண்டகாலமாக சமூகப்பணியில் ஆர்வலரான இவர் காத்தான்குடி சமூக மதிப்பிட்டுக்கான அமைப்பின் (OSA) தலைவர், காத்தான்குடி இஸ்லாமிய இலக்கியக்கழகத்தின் பொதுச்செயலாளர், புதிய காத்தான்குடி பெரிய ஜூம்அப்பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் என்று பல்வேறு சமூசேவை நிறுவனங்களில் இணைந்து சமூகப்பணியாற்றியும் வருகிறார்.
Published by



Leave a comment